அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்.. கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..