• Saturday, October 16, 2010

    சீனியோரிட்டியின் பச்சைப்பக்கங்கள்..



    பல மைல் தூரத்தில் இருந்து பல மைற்கற்களை கடந்து பல்கலை கழகம் என்ற புரையோடிய கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் விழிகளாய் தடம் பதிக்கும் இளரத்தங்களின் துடிப்புகள் மறுக்கப்பட்ட கதை, இது பல்கலை தந்த கதை
    பல்கலை நுழைவாயிலில் நாடி நிற்கையிலே பல கனவுகள், பாடசாலை அடித்தளமிட்ட களங்களின்  விஸ்தீரமான கேந்திரமாக பல்கலை கழகம் எம் எதிர் பார்ப்பில்.....

    பள்ளி சிட்டுக்களாய் வயதுகளின் பரிணாம வளர்ச்சியிலே
    அனுபவம் அற்ற சிறகுகளாய் இருக்கையிலேயே கிடைத்த ஒரு ஆசிரியரின் அரவணைப்பிலே மைற்கற்கள் பல கண்டோம் மனசிலே அடித்தளங்கள் பல இட்டோம், விழாக்களின் நாயகர்கள்களும் ஆனோம். இந்த வாழ்க்கை முடியும் வேளையில் நினைவுகள் ததும்பையில் பல்கலைகழக அழைப்பு ஆறுதல் கோடி தந்தது. எதிபார்ப்புகள் கோடியில் இலட்சம் வைத்தது. ஒற்றை ஆசிரியரின் அரவணைப்பு வேளையிலே பாதி வாழ்கையின் அனுபவம் பெற்றோமே,  பல்கலையில் பன்மடங்கு பேராசிரியர்கள், வளங்கள் பல கோடி அத்துனைக்கும் மேல் அரவணைக்க ஆயிரம் அண்ணாமார், கனவுகள் கோடி சேர இது ஒன்று போதாதா?


    இத்துனையும் உடைகிறது உள்நுழைந்த மறுகணமே, கனவுகளின் கொலைகள்  திட்டவட்டமாக கட்டவிழ்த்து விடப்படுகின்றது, கொலைகள் கட்டம் கட்டமாக அரங்கேறுகின்றன, அத்துனையும் சீனியோரிட்டி என்ற பகட்டுகளின் கொட்டங்களில்.

    பல்கலை கழக அரங்கேற்றமே பகிடிவதைகளின் கூடமாக பல்லிக்கிறது, காரணம் கற்பிக்கப்படுகின்றது, எப்படி தெரியுமா?
    Ø  பச் பிட்(Batch Fit) கூடுமாம்!
    Ø  நட்புகள் மலர்கிறதாம்!
    Ø  அண்ணன்மார்களோட அன்பு கூடுமாம்!


    இப்படி சொல்லப்பட்ட காரணங்களில் அரங்கேறும் வதைகளை காரணங்களின்   நியாயங்களோடு இன்முகம் கொண்டு வரவேற்கின்றோம். ஆனால் பின்னணியில் அரங்கேறுகிறது பல சதி திட்டங்கள்,

    Ø  பிரதேசவாதம் – வடக்கு கிழக்கு போய், வடக்கிலே இரண்டு கிழக்கிலே நாலு, அதுக்குலே வடக்கிலே வடக்கில் இரண்டு, வடக்கிலே தெற்கில் இரண்டு, மத்தியில் ஒன்று.
    இத்துனையும்  கற்பித்து, ஊர் பிட் என்ற பேயரில் திட்டமிட்ட பிரிப்பும், கையாலாகாத   சிரேஸ்டதுவங்களின் மண்டை கழுவல் ஊடான தமக்கான எதிர்கால எடுபிடிகள் செலேக்சனும் அரங்கேறுகிறது.

    Ø  ஜென்டில்மன் உருவாக்கம் – தண்ணியில் மிதப்பவர்கள் தான் நாட்டின் பெரும் குடி மக்கள், இவர்கள் தான் ஜென்டில்மன், மீதி முழுக்க பொன்னையர்கள், இப்படியான பெயரில் சைட் ஈட்ஸ்கள் உருவாக்கப்படுகிறது, இதுதான் அவர்களுக்கு சமத்துவமாம். 

    Ø  வாளிகள் வழியுது – கொமனில கூட்டாட்ச்சி போனில பாவம் அந்த தாவணிகளோட தனியாட்சி.. ஜீன்சுகளுக்கு வாளி வைக்குது ஒருகூட்டம் மறுபக்கம் தாவணிகளுக்கு வாளிகள் வைக்குது பெரும்கூட்டம் இவ்வளவும் செய்யுறது பெண்வாசம் பிடிக்காது என்று பிதற்றித்திரியும் ஆசாமிகள்...

    சரி ஏதோ ஒருவருஷம் முடியட்டும்.. யார்யாரெண்டாலும் எதெண்டாலும் பண்ணட்டும் நாமளும் பண்ணுவம் அடுத்தவருஷம் எண்டு பொறுத்திடுவம். ஓடிப்போச்சு மண்டை கழுவுற காலமும் வாளிவைக்குற வருசமும்.. பின்னாடி கிளம்புது புதுசு புதுசா பிரச்சனை..

    ஆசைகளோட வந்தவன் புதுசா ஏதும் செய்யநினைச்சா அடக்க நினைக்குது ஒரு கொட்டம் சீனியாரிட்டி... அரவணைக்க தெரியாட்டியும் ஆட்டம் காட்டாம இருக்க மாட்டாங்க புதுசா கம்பஸ் வந்து கொம்பு முளைச்ச சில சீனியாரிட்டி-பழைய புத்தகபூச்சி - நேற்றைய மழையுல புதுசா முழைச்ச ஈசல்கள்..
    no comments.. see this video..............




    சரி சும்மா இருக்குதுகளா இந்த பூச்சிகள் கிளப்பிவிடுது பிரச்சனைகளை பட்ச்சுக்குல்லையே ‘’அவன் ஆடுறான், அவன் துள்ளுறான்.. அவன் தலையாகப்பாக்குறான்.. அவன அடக்கணும்.. அவன ஆடவிடாதே..’’ எண்டு ஊரில கிணத்தடில கூடியிருந்து புருசன் பெஞ்சாதிக்க பிரச்சனைய கிளப்பி விட்டு ரசிக்குற கேவலம் கேட்ட சகுனிகளாய்..



    நீ செய்யலையா செய்யுறவனை செய்யவிடு.. அவன் உன்ன விட வயசு கூடவா குறைவா? எதுக்கு அத பத்தி யோசிக்குறாய்? உனக்குமுன்னால அவன் செய்தா உன் வேட்டி அவுந்துடுமா? எண்டெல்லாம் திட்ட தோணுது அந்த கனவுகள் கசக்கப்பட்ட இதயத்துக்கு ஆனா திட்டாமாட்டான்.. காரணம் சிரேஸ்டத்துவம் என்ற வார்த்தைக்கு மட்டும் மரியாதை.
    போன வருஷம் நீதி சொல்லி பகிடிவதை செஞ்ச கூட்டம் இந்தவருசம் திருந்திட்டுதாம்.. பகிடிவதை பண்ணினா கொன்னுடுவாய்ங்கலாம்.. சரி திருந்திட்டாய்ங்க இப்பவாச்சும் , பகிடிவதை எண்ட ஒண்டு தொலைஞ்சிட்டுது எண்டு பாத்தா, அட்வைசு ஊருக்காம்.. இந்த உத்தமர்களுக்கு இல்லையாம்..

    கழகங்கள் மொழிக்கு மொழி.. தலைமைகள் சீனியாரிட்டி.. கூட்டங்கள் வருசத்தில ஒருக்கா.. ஆனா எவனாச்சும் அப்பாவி அம்புட்டான் எண்டா அவனுக்கு அடிக்க ஒருகூட்டம்.. அண்டைக்குதான் அந்தந்த சீனியாரிட்டி சொல்லிக்கும் தங்களுக்க ‘’மச்சான் கண்டு கன காலம்’’
    எத்தனை சீனியாரிட்டி ஒரு ஜூனியர வளர்குது.??? அந்தந்த சீனியாரிட்டில ஐஞ்சஞ்சு நல்லவய்ங்க இருப்பாங்க. அவங்களும் மிச்சதுல மழுங்கிடுவாங்க. அந்த ஐஞ்சும் ஐஞ்சு யூனியர அட்வைஸ் பண்ணி வளர்க நினைச்சா மிச்ச பினாமிகள் ரெண்டு ஐஞ்சையும் பொன்னையங்களா பேர்சூட்டுது.

    இவங்கள் தான் நியாயவாதிகளாம். இவர்கள்தான் தூசு நிரம்பிய தமிழை தட்டி துடைப்பார்களாம்.. இந்தகூட்டமோ ஒரு சந்தர்ப்பவாதிகள், அடைக்கலவாதிகள் சுமாராக சொல்லப்போனால் புலிதோல் போர்த்திய எருமைகள் என்று சொன்னால் எருமைகள் கண்ணீர் விடுகிறது அவமானத்தால். ஆங்கிலத்திலும் பிச்சு உதறுவினமாம். வீண் சீன் போடுறண்டா.. ‘’You have to response me ‘’ பிறகு தமிழுல வேற ரீப்பீட் பண்ணுறாங்க.. ‘’நீ எனக்கு மரியாதை கொடுக்கணும்..’’ அப்போதான் விளங்குது இங்கிலீசுல இததான் சொன்னவய்ங்க எண்டு.. தெரிஞ்சத பண்ணுங்க தெரியாதத மத்தவங்களிட்ட உட்டுடுங்க..


    மரியாதை தானா வரணும்.  கேட்டு வாங்குறதும் அதட்டி வாங்குறதும் பிச்சை எடுப்பதும் அல்ல.. இப்படி சொந்தமானத்தை விக்குறதவிட ஒட்டுத்துணியில்லாம திரியலாம்.. சாமியார் எண்டாவது மதிப்பாங்க.
    ஆசைகள் கனவுகளோட வந்த மொட்டுகளை சீனியாரிட்டி எண்ட பேருல கசக்கி நாசமாக்கிடாதீங்க.. அது உங்களை போல நாலு பெயர்கெட்ட சீனியோரிட்டிய உருவாக்கி பலநூறு மொட்டுகளை நசுக்கும்.. சீனியாரிட்டி மனசுல வரணும் அறிவுல வரணும் வயசுல மட்டும் வந்தா அது inferiority complex.
    தொடரும்.....

    Post Comment

    11 comments:

    shatheesan said...

    superv....hope u studied in sri ja'pura.....!ithu enathu manakkumuralum kooda!

    Ashwin-WIN said...

    @shatheesan
    அப்போ அங்கயும் உந்த கொடுமைதானா?

    Anonymous said...

    supermaaaaaaaaaaaaaa........உண்மையிலே கலக்கிட்டிங்க அந்த கனவுகளின் கொலைகள் என்ற வசனத்தில்,இன்னும் நிறைய உங்களிடம் எதிர்பாக்கின்றோம் ஏனென்றால் உங்களிடம்
    திறமை
    கொட்டிக்கிடக்கின்றது பாஸ்

    Rajah said...

    ஆனா எவனாச்சும் அப்பாவி அம்புட்டான் எண்டா அவனுக்கு அடிக்க ஒருகூட்டம்.. அண்டைக்குதான் அந்தந்த சீனியாரிட்டி சொல்லிக்கும் தங்களுக்க ‘’மச்சான் கண்டு காண காலம்’

    ம.தி.சுதா said...

    இதன் தாக்கம் கொடியது... இது எப்போது அரம்பிக்கப்பட்டது எனத் தெரியவில்லை.. பெரும்பாலும் நாய்களைப் பார்த்துத் தான் தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்...

    alex paranthaman said...

    நல்லதொரு ஆக்கம் அஸ்வின்... பகிடிவதைக்கு எதிராக ஒவ்வொரு மாணவரும் செயல்பட வேண்டும்... இது தொடர்பாக 18.04.2010 தினகரனில் வெளியான எனது ஆக்கத்தின் தொடுப்பு இங்கே: http://amuthan.wordpress.com/2009/12/18/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/

    அமரேஷ் said...

    நல்லதொரு எழுத்தாக்கம்.ஆனால் கருத்துக்களுக்கு முழுமையாக துணைபோக முடியவில்லை.எதிர்க்கருத்துக்கள் இல்லாதவிடத்தி இந்த தரமான எழுத்தாக்கம் வெல்லும்.அது திண்ணம்.ஏனெண்ரால் எழுத்தாளர் வளர்க்கப்பட்ட விதம் அப்பிடி.

    Ashwin-WIN said...

    This comment has been removed by the author.

    Ashwin-WIN said...

    @மன்னார் அமுதன்
    நான் பகிடி வதைகளுக்கு எதிரானவன் அல்ல. பகிடிவதை என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிரானவன். பகிடிவதை நீண்டகாலம் நீடிப்பதில்லை.. அது குறுகிய கால வேதனை ஆனால் நீண்ட காலத்து இன்ப நினைவுகளை நண்பர்களோடு சேர்த்து மீட்டக்கூடிய ஒன்று..
    ஆனால் இதெல்லாத்தையும் விட கொடுமையானதுதான் சீநியோரிட்டி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்கள். சீநியோரிட்டி மதிக்கக்கூடிய ஒன்று அதன் மகிமையை குறைக்கும் செயலில் ஈடுபடுவோர் நான் சொன்னதுபோல் infurity complex உடையோரே.

    Ashwin-WIN said...

    @அமரேஷ்
    நன்றி அமரேஷ் கருத்துகளுக்கு.. நிச்சயமாக எல்லாருடைய கருத்தும் எல்லோருடனும் ஒத்துபோவது அரிது.. ஆனால் நான் இருந்து அனுபவித்த சூழல் அப்படி.. அது சொல்லிய உண்மைகளே இப்படி..

    sureshwar said...

    மிக மிக சரியாகச்சொல்லியிருக்கிரியல் அஷ்வின். என்னுடைய ஆதங்கமும் இதுதான் என் போன்ற பலருடைய ஆதங்கமும் இதுதான். ஆனால் வெளிப்படையாக கதைக்க முடியவில்லை. நன்றி இப்படி ஒரு பதிவுக்கு.

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner