• Saturday, May 29, 2010

    இந்திய அணி -அவமானம் , சிம்பாவே-அபாரம், இலங்கை-அவதானம்.

    இந்தியா ,இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் பங்குபெறும் முக்கோண கிரிக்கெட் தொடர் இன்று சிம்பாவேயில் ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா சிம்பாவே அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆறு விக்கெட்டுகளால் சிம்பாவே அணி இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு நல்லதோர் படிப்பினையை புகட்டியுள்ளது.



    இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையில் கார்த்திக்,முரளி விஜய்,விராத் ஹோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான்,ஜடேஜா ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையுடனும் IPL போட்டிகளில் அசத்திய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களாக வினய்குமார்,அசோக் டின்டா , அமித் மிர்சா,யாதவ் ஆகியோருடன் வழமையான இந்திய அணிக்கு எவ்விதத்திலும் குறையாத அணியாக களமிறங்க சிம்பாவே அணி தைபு தவிர்ந்த வழமையான அணியாக களமிறங்கியது.



    நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணித்தலைவர் ரெய்னா துடுப்பெடுத்தாட தீர்மானித்து இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டங்களை குவிக்க சற்று சிரமப்பட்ட இந்திய அணி 30 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களையே பெற்றது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா இருவரும் அதிரடியாக ஆடி 50 ஓவர்கள் நிறைவில் 285 ஓட்டங்களை எடுத்து அணியை மிகவும் வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர்.இதில் ரோஹித் ஷர்மா 114 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். சிம்பாவே அணி சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய மோபீயு 10 ஓவர்கள் பந்து வீசி 63 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும்,உற்செயா 10 ஓவர்கள் பந்து வீசி 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    நாணயசுழற்சியின்  போது ரெய்னா "270 ஓட்டங்களை நாம் பெறுவோமாயின் அது எதிரணியை வீழ்த்துவதற்கு அதிகபட்சமாக இருக்கும்" என கூறியது நடந்துவிடவே மேலதிகமாக 14 ஓட்டங்களை எடுத்த களிப்பில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். சிம்பாவே அணியின் விக்கெட்டுகளை இலகுவாக வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய அணிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்டகாரர்களாக களமிறங்கிய மசகட்சா மற்றும் விக்கெட் காப்பாளர் டெய்லர் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே தொம்சம் செய்யதொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 78 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றனர். பின்னர்  மசகட்சா 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல பின் லாம்ப், டெய்லருடன் ஜோடிசேர்ந்து அணி ஓட்ட எண்ணிக்கையினை 151 ஆக உயர்த்தினர் 


    இந்நிலையில் லாம்ப் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல மறுபுறத்தில் டெய்லர் நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டுகொண்டிருந்தார். பின்னர் டெய்லர் 4 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்களுடன் 81 ஓட்டங்களை பெற்று 34 .1 ஆவது ஓவரில் வினய்குமாரின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார். 




    வெற்றிபெறுவதற்கு 95 பந்துகளில் 110 ஓட்டங்களை பெறவேண்டு மென்ற நிலையில் களத்தில் இன்றைய போட்டியின் புதுமுக வீரர் எர்வின் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் கோன்வென்றி இருந்தனர். கோன்வென்றி இந்திய அணியின் பந்துகளை எல்லைக்கோட்டுக்கப்பால் அதிரடியாக அனுப்பிகொண்டிருந்தார். இருவரினதும் நிதான மற்றும் அதிரடி ஆட்டத்தின் மூலம் சிம்பாவே அணி வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது (இந்நிலையில் ரெய்னாவின் முகத்தை பார்க்கவேண்டும்,இந்த இடத்தில தோனி இருந்திருக்கவேணும் கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்கும்.)   கோன்வென்றி 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 25 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து செல்ல அதன்பிறகு வந்த அணித்தலைவர் அதிரடியாக எர்வினுடன் நிலைத்து நின்று ஆடி 48.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஓட்ட இலக்கை அடைந்து இலகுவாக  வெற்றிபெற்றது. புதுமுகவீரர் எர்வின் தனது கன்னி அரைசதத்துடன் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் சிக்கும்புர ஆட்டமிழக்காது 4 நான்கு ஓட்டங்களுடன் 16 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.


    போட்டியின் சிறப்பாட்டக்காரராக களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.  


    சிம்பாவே அணியால் இரண்டாவது அணியாக துடுப்பெடுத்தாடி துரத்தப்பட்ட ஓட்ட இலக்குகளில் இன்றைய இலக்கான 289 ற்கு இரண்டாவது இடம். முதலிடம் 2000 ஆம் ஆண்டில் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிராக பெறப்பட்ட 290 ஓட்டங்களாகும். தவிர இரண்டாம்,மூன்றாம் , நான்காம் இடங்களில் வெல்லப்பட்டதும் இந்திய அணிக்கு எதிராகவே என்பது குறிப்பிடத்தக்கது.     




    இன்றைய சிம்பாவே அணியின் உத்வேகத்தையும் களத்தடுப்பையும் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையையும் பார்க்கும் போது ஒரிஜினல் இந்திய அணி இறங்கியிருந்தால் கூட அவல்தான் கிடைத்திருக்கும். (ஒரிஜினல் இந்திய அணியினை விட சிம்பாவே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய பந்துவீச்சாளர்கள் திறமையானவர்கள்)  மொத்தத்தில் சிம்பாவே அணி யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டியுள்ளதுடன் குறைத்து எடைபோடும் ஜாம்பவான்களுக்கு விரலை விட்டு ஆட்டி( கண்ணுக்குள்) இருக்கிறார்கள். அத்தோடு இலங்கை அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பார்ப்போம் அடுத்து டில்ஷான் என்ன செய்யப்போகிறார் என்று.


    *** சிம்பாவே அணி பலவீனமான அணி என்பதால் திறமையான வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டோம் - தோனி 


    ***இந்திய அணி திறமையான வீரர்களை தவிர்த்துக்கொண்டதால் (தன்மானம் கருதி ) நாங்களும் ஓய்வெடுத்துக்கொள்கிறோம்  -சங்ககார.

    Post Comment

    4 comments:

    கிடுகுவேலி said...

    இந்தியாவின் காலத்தை நினைக்கும் போது சிரிப்பாக உள்ளது. அவர்கள் தோல்வி, தனிப்பட்ட எனக்கு மகிழ்ச்சியே. அடுத்த வருடம் உலகக்கோப்பை என்று வரும்போது இப்படியான சோதனை முயற்சிகள் தேவையற்ற ஒன்று. நன்றாக உள்ளது. இயலுமானவரை எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.

    அமரேஷ் said...

    Are you writing articles for any newspaper..?
    Anyway just go beyond your damn summary of the match and write some thing professional..Its blog..You are supposed to analyse things..Its not newspaper..


    And more over ii oppose that you try to equalize the Current Indian team with the Regular Indian team..

    You can't never compare Zaheer Khan and Harbjan Sing with these debut bowlers..And they were not the best bowlers in the IPL too..

    And you have compared M.S.Dhoni and Raina..There you are..Seems silly comparing both them..Whatever it is Dhoni is the best captain India have ever seen...So it is absolutely an Indian A team in Africa..

    1.Shewag
    2.Tenducar
    3.Gambhir
    4.Yuvaraj
    5.Dhoni
    6.Raina
    7.Kholi
    8.Pathan
    9.Nehra
    10.Khan
    11.Harbajan

    This is suppose to be the team for the WC..And they just wanted to get some consistence Players to replace Pathan and Nehra..So they just sent some new bowlers to check with...And the players badly need a rest..They have lot of games to come..Why don't you guys think of these and write it...???

    Anonymous said...

    எண்டாலும் நம்ம ஜெயசூரியா வை Opening ஆ இறக்கி இருந்தா, அவர் இருக்கிற form க்கு பின்னி இருப்பார் தானே...

    Ashwin-WIN said...

    என்ன பின்னி இருப்பாரு.. ஏதாவது கதிர பின்னுர வேலையா. ?
    (ஆனாலும் சிம்பாவேய கண்டா நம்ம தலைக்கு ஒரு குதூகலம் வாறதுதான்.

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner