• Saturday, January 7, 2012

    ஏன் அத்தனையும் என்னைதேடுது? - பௌதீகக்காதல்


    ஏ சுட்டிப்பெண்ணே ஏன்
    எல்லாம் என்மேல் பாயவிட்டாய்
    புது சாயம் பூசி காதல் என்கிறாய்..

    என் வெப்பம் குறைந்து போனதோ - ஏன்
    என்னில் பாயுது உன் கண்ணின் கதிர்வீச்சு.
    என் அமுக்கம் தாழ்ந்து போனதோ - ஏன்
    என்னில் பாயுது உன் மூச்சின் காற்று.
    என் செறிவும் குறைந்து போனதோ- ஏன்
    என்னில் பரவுது உந்தன் வாசனை ?

    என் ஈர்ப்பழுத்தமும் வீழ்ந்ததோ !
    உன் கூந்தல் பூ என்னை நாடுதே.
    மின்அழுத்தம் குறைந்து போனேனா - ஏன்
    என்னில் பாயுது உன் காதல் மின்சாரம்.
    அட எல்லாம் குறைந்தும் ஏனோ என்னில்
    இன்னொரு உயிரின் எடைஏற்றம் ???

    உன்னால் என் பௌதீகம் இன்று
    இஸ்லாம் கொண்ட பாரசீகம் ஆனதே..


    குட்டி கவிதை = குட்டி கசங்கல்= குட்டி கந்தல் என்னமோ எதோ நம்ம வேலை முடிஞ்சு.....

    டிஸ்கி- ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் (இன்றைய ஈரான்) மீதான அரேபிய நாடுகளின் படையெடுப்பால் பாரசீகம் அழிந்து அங்கு இஸ்லாம் குடிகொண்டது.
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner