• Friday, December 17, 2010

    'ஐ ஆம் பக்கோடா.. ப்ரொம் கிருலப்பன' @ பதிவர் சந்திப்பு 2010

    பலநாள் ஆசையாய் சந்திக்கணும் எண்ட முடிவாய்
    பதிவர் எல்லாம் கூடிட்டோம் கூடவே பக்கோடாவும்..
    நிருஜாவும் வந்திட்டாள் நிகழ்வும் தொடங்கிட்டு
    நெடுநாள் ஆசையை தேக்கிவைத்த புல்லட்டும் கிளுகிளுப்பில்..
    சேது அய்யா செந்தமிழும் மது அண்ணா மதுயிசமும் துள்ள,
    கருத்துரைகள் செறிந்து தெறிக்குது ஆனாலும் கோபின்ட
    மூஞ்சி மட்டும் இங்கிலாந்திட்ட அடிவாங்கின பாண்டிங்மாரி..

    விக்கமாதித்தன் தன்ட பவர பாவிச்சு கோபின்ட
    நெனைப்ப புடிக்க அது பக்கோடவில புதைஞ்சது தெரிஞ்சுது..
    ஆமா.. கோபி பக்கோடா கண்டார் பக்கோடாவே கண்டார்
    மைக் புடிச்சுட்டு தூங்கிட்டிருந்த அண்ணைய பாத்து
    பக்கோடா கொண்டுவாரும் என்றான்..
    நீள் கெண்டை விழியினாலே சுவருக்கு அப்பால் நின்று
    ''மவனே இப்போ பக்கோடா கேட்டா கொன்னுடுவன் '' என்றாள் நிருஜா..
    நாவில நயாகரா ஊற்றெடுக்க
    நடுவயித்தில நாலைஞ்சுபேர் புட்பால் அடிக்க
    பக்கோடா தின்னனும் எண்டு
    பத்தயம் எடுத்தான் கோபி கூடவே
    பவனையும் வளைச்சு போட்டான்..
    பக்கோடாவுக்கு பறிபோன  பவனும்
    பக்கோடாவோடு வருவேன் என்று படபடவெண்டு போனான்
    அங்கிருந்த வந்திய பாலகன் அழைத்து
    'தம்பி மொக்கை பதிவர் அந்தஸ்து பவன் நீரெல்லோ'
    எண்டு ஒரு பிட்டை போட்டு கூடவே 
    'மொக்கை பதிவ பத்தி சீன கலைஞர் 
    சுங்குவா சிங்கி என்ன சொல்லியிருக்கார் தெரியுமோ'
    எண்ட பக்கொடாவே வேணாம்
    தலைதப்பினாபோதுமெண்டு ஓடியே வந்திட்டான்.

    இதெல்லாம் பாத்த நம்ம சுதா வந்து
    ஒரு ஓடையா கோபிய அழைச்சுப்போய்
    'சுடுசோறு தரெட்டோ' எண்டு கேக்க
    காண்டாகி கப்சிப்பாகிட்டான்.
    அப்ப பாத்து ஓடையில ரெண்டு போன்
    வெச்சு பினைஞ்சிட்டிருந்த அனு சிக்கினான்.
    பக்கோடா வேணும் அனு பாத்தெடுத்துட்டு வா எண்ட
    ''பொறுங்கன்னே சங்கீதா வீடு பக்கத்து தெருதான் 
    அங்க போய் வாங்கிவாறேன் இல்லாட்டி 
    அடுத்த தெருதான் நிலாந்தி வீடு 
    அவள கேட்டா செஞ்சே தருவா'' எண்ட
    சங்கீதாவும் வேணாம்
    நிலாந்தி வீட்ட மிலாந்தவும் வேணாம்
    எனக்கந்த பக்கோடாதான் வேணுமெண்டான்..

    அப்பவெண்டு பதறிட்டு அங்க வந்த
    கூல் பாய் ரெண்டு நிமிஷம் சிரிச்ச பிறகு
    'அண்ணை பதிவர் அறிமுகம் நடக்குது
    அடுத்தது நீங்கதான் எண்ட அதுக்கு
    கோபி நாலு நிமிஷம் சிரிச்சுட்டு
    பதறிப்பட்டு ஓடினான்.. போன வேகத்துல
    கவிஞர் சுபாலா கையில மைக்க கொடுக்க
    வேர்த்து வெலவெலுத்துப்போய்
    ''ஐ ஆம் பக்கோடா.. ப்ரொம் கிருலப்பன''
    அவ்வளவுதான்...சபையே கொல்......
    கடைசியா கோபிக்கு பக்கோடா கிடைச்சுதா?
    இல்லையா? எண்டுறத எதிர்வரும் 19ஆம் தேதி பதிவர் சந்திப்புல வந்து தெரிஞ்சு கொள்ளுங்க நண்பெர்ஸ்...

    பதிவர் சந்திப்பு பற்றிய விரிவான தகவல்களுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் இங்கே கிளிக் பண்ணவும்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ http://www.facebook.com/event.php?eid=173384242681038&index=1

    Post Comment

    12 comments:

    வந்தியத்தேவன் said...

    ஏன் இந்தக் கொலைவெறி. மறக்காமல் பதிவர் சந்திப்பில் பக்கோடா கொடுக்கவும்.

    ARV Loshan said...

    ஆகா.. ஆகா.. பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
    பக்கோடா.. அனலிஸ்ட்டின் புதிய பெயர்...

    என்னா கடி? ரத்தம் பீறிடுகிறது..

    பி.கு - உண்மையாவே சந்திப்பில் பக்கோடா தருவீங்களோ? கூடவே சூடா டீயும் தந்தால் நல்லா இருக்கும்.
    பக்கொடாவுக்கு சாரி கன்கோனுக்கு கொடுக்க முதல் எங்களை மாதிரி அப்பாவிகளுக்குப் பரிமாறினால் நல்லது.

    LOSHAN
    www.arvloshan.com

    Ashwin-WIN said...

    @வந்தியத்தேவன்
    //மறக்காமல் பதிவர் சந்திப்பில் பக்கோடா கொடுக்கவும்.//
    பக்கோடா இல்லாம பதிவர் சந்திப்பா.. கொடுப்பும் ஆனா...அவசரப்படக்கூடாது..

    Ashwin-WIN said...

    @LOSHAN
    //ஆகா.. ஆகா.. பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
    பக்கோடா.. அனலிஸ்ட்டின் புதிய பெயர்...//
    ஆகா... இதுக்கும் எனக்கும் எந்த சாம்பந்தமும் இல்ல கோபி...

    நிரூஜா said...

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    யோ வொய்ஸ் (யோகா) said...

    :)

    கன்கொன் || Kangon said...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    என்னய்யா நடக்குது இந்த நாட்டில?

    KANA VARO said...

    ஆஹா.... இதென்ன புது வம்பா இருக்கு. பக்கோடாவில் ஒரு புதுக்கவிதையா. ரசித்தேன்.

    Vathees Varunan said...

    ஹா..ஹா... அருமை..டவுசர் கிழிகிறது...
    ஆனாலும் பக்கோடா பற்றிய உயர் இரகசியத்தை இப்பவே கசியவிட்டியளே...

    ஷஹன்ஷா said...

    அருமை அருமை....என்ன ஒரு கடி....
    நாளை பக்கோடா கடிக்க வாழ்த்துகள்...........

    Kiruthigan said...

    அனலிஷ்ட்டின் அடுத்த அவதார்....(ஆயிரம் கோடி செலவுபண்ணாமலே பதிவர் சந்திப்பில ரிலீஸ் பண்ணினது..)

    ம.தி.சுதா said...

    அடடா பக்கொடாவால் இப்படி புதுக் கோடா... அது சரி மிஞ்சிய பக்கொடா எங்கே...

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner