50 தொடர்வோர்.
Facebook ல ஸ்டேட்டஸ் ம் குறிப்புமா போட்டு மத்தவங்களுக்கு நூற்றெட்டு
Notification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு
.. தெரிஞ்சுதான் தொடருறாங்களோ தெரியாம தொடருறாங்களோ தெரியல.. என்னையும் , என் பதிவு எண்ட பேருல போடுறதுகளயும் தொடர்ற பாசமலர்களின் எண்ணிக்கை ஒருமாதிரி முக்கி முக்கி ஐம்பதை தொட்டிருக்கு.. இது ஐநூறு ஐயாயிரம் எண்டு தொடரணும் அஷ்வின் எண்டு எனக்கு நானே வாழ்த்திக்கிறன் ஏனென்டா மத்தவங்க வாழ்த்த வருவாய்ங்களோ தெரியாதுல்ல.. அத்தோடு என்னை தொடரும் அந்த எதையும் தாங்கும் ஐம்பது இதயங்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்... தொடர்ந்து எழுதி கொலை பண்ணுவான் கோவிச்சுகாதேங்கோ..

கோபி
கங்கொன் என்று செல்ல செல்லமாக அழைக்கப்படும் கோபி தன்னுடையா வாழ்க்கையை ஒரு குறும்படமாக தானே சொந்த செலவில் எடுத்து வெளியிடவுள்ளார்.. கதையும் தயார் நிலையில்.. கதையில் காதல்.. துரோகம்.. என்ஜாய்மன்ட், வெளிநாட்டு அழகு அம்மா சென்டிமென்ட் என்று எல்லா அம்சமும் உள்ளதாம்.. அத்தோடு எதிர்பாராத திருப்பங்களும் இருக்கிறதாம். ஒரு சிறந்த இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறார்.. அத்தோடு கோபி இப்போதெல்லாம் மாமிசம் சாப்பிடுவதை அறவே ஒதுக்கியுள்ளார்.. சுத்த தாவர உண்ணியாக மாறி உள்ளார். மங்கலம் பொங்கட்டும்..
உலக எயிட்ஸ் தினம்
இன்று மார்கழி ஓராம் தேதி உலக எயிட்ஸ் தினமாக ஞாபகப்படுத்தப்படுகிறது.. இந்த இடத்தில் எயிட்சினால் பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிடவும் உலகில் எய்ட்ஸ் என்ற கொடிய வியாதியை ஒழித்திட தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு பேணி வாழ சுகவாழ்வு வாழ வேண்டுகிறேன். ஆண்டவன் கொடுத்த அறிவையும் உடலையும் நன்மைக்காய் பேணுவோம். எயிட்சை பரவாது தடுப்போம்..
3 ஆவது பதிவர் சந்திப்பும் வதீஸ் அண்ணா பார்ட்டியும்
மூன்றாவது பதிவர் சந்திப்புக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.. அதை முன்னிட்டு நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் கூடி திட்டமிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்றும் கூடிய கூட்டத்தில் நான் உட்பட வதீஸ் அண்ணா, மாலவன் அண்ணா, கோபி மற்றும் அனுதினன் ஆகியோர் பங்கேற்றோம்.. துடிப்புடன் செயற்படும் நம்ம கோபி மற்றும் பல உள் விடயங்களில் அனுபவம் மிக்க அனுதிணன் மிக்க ஆர்வத்துடன் கருத்துகளை முன் வைத்தனர்.. மாலவன் அண்ணா காற்றுவாங்கியபடியே அமைப்புகளை செய்துகொண்டிருந்தார்.. இன்றைய கூட்டத்தின் கதாநாயகனும் பிறந்தநாள் பார்டியை ஒழுங்கு செய்திருந்தவருமான வதீஸ் அண்ணா பில்லை எண்ணி எண்ணி ஏங்கியபடி திட்டமிட்டு கொண்டிருந்தார்.. இனி யாரும் பார்டி கேட்டு தொந்தரவு பண்ணப்படாது எண்டும் கூறி இருந்தார்.. கூட்டம் முடிந்ததும் மாலவன் அண்ணா பயிற்றுவிப்பில் ஸ்னூக்கர் விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.. அதில் அருமையா பூந்து விளையாடின அனுதினன் கிளைமாக்சில போட்ட shoot ஐ நினைக்கேக இப்பகூட நித்திர வரேல.. சூப்பர் அனு..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா..
. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா..
. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
17 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்....
// பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா.. //
கிர்ர்ர்ர்ர்ர்........
//பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா..
ஹையோ.. ஹையோ...!
என்னாது கோபிக்கு எயிட்ஸா? சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி?
50க்கு வாழ்த்துக்கள்..:)
//சிறந்த இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறார்.//
ஹாஹா யாமிருக்க பயமேன்..:P
எயிட்ஸ் - பரவுவதைத்தடுப்போம் முற்றாக ஒழிப்போம்..:)
சந்திப்பு - சந்திப்போம்
மு.கு - வதீஸ் அண்ணா ரொம்ப நல்லவர்..:P
///யோ வொய்ஸ் (யோகா) said...
என்னாது கோபிக்கு எயிட்ஸா? சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி?
///
அதுதானே கன்கொன் எப்ப பார்ட்டி? சந்திப்பு முடிஞ்சாப்பிறகா??..:P
@யோ வொய்ஸ் (யோகா)
கோபிண்ட பிரகாசமான எதிர்காலத்துல கைய வச்சுடாதீங்க வொய்ஸ்..:P
@Bavan
நன்றி பவன்..
பவன் நீங்க இயக்கனும்னா அந்த படத்துல வர்ற கிளைமாகஸ்ல ஹீரோயின் ஹீரோட்ட திரும்பி வந்து தன்னை மீண்டும் எத்துக்கொல்லும்படி கேக்குறார்.. அதுக்கு ஹீரோ என்ன டைலாக் பேசுவார் எண்டத கரெட்டா சொல்லணும்.. அப்போதான் இயக்க அனுமதி தருவார் கோபி..
தலைப்ப பார்த்து முதல்ல குழம்பித்தான் போனேன்!:-)
யோ வொய்ஸ் (யோகா) said...
என்னாது கோபிக்கு எயிட்ஸா? சொல்லவேயில்ல, கோபி அதுக்கு எப்ப பார்ட்டி?
ha ha ha
அரைச்சத வாழ்த்துக்கள் அஷ்வின்..
வாழ்த்துக்கள் கங்கோன். சொல்லவே இல்ல ;)
இது எந்தக் காதல் பற்றியது? முதலாவதா? மூன்றாவதா? ;)
எயிட்ஸ் - நாம் எம்மைக் காத்துக்கொள்வோம்
வதீஸ் - எங்களுக்கு எப்போ பார்ட்டி? ;)
//மாலவன் அண்ணா காற்றுவாங்கியபடியே அமைப்புகளை செய்துகொண்டிருந்தார்..//
//அருமையா பூந்து விளையாடின அனுதினன் கிளைமாக்சில போட்ட shoot ஐ //
விளங்குது ;)
//பதிவின் தலைப்ப பாத்து யாரும் தப்பு கணக்கு போட்டுடாதீங்கயா.//
நாங்க அப்பிடி கணக்குப் போடலைன்னு சொன்னா நீங்களும் கண்கோனும் நம்பவா போறீங்க? ;)
LOSHAN
www.arvloshan.com
அடபாவி...
@LOSHAN
நன்றி லோஷன் அண்ணா :)
தப்பு கணக்கு போட்டுடாதீங்க லோஷன் அண்ணா.. ஆனாலும் உங்க கணக்கு ரைடாதான் இருக்கும்..:P
@வதீஸ்-Vathees
வதீஷ் அண்ணா பாத்தீங்களா நான் கடைசிவரைக்கும் நீங்க பார்ட்டி தந்த விஷயத்தை சொல்லவே இல்ல...
இப்படி தலைப்பு வைக்க ஆக்களை வச்சு யோசிப்பிங்களோ??
@பகீ
நன்றி வருகைக்கு..
//இப்படி தலைப்பு வைக்க ஆக்களை வச்சு யோசிப்பிங்களோ??//
எல்லாம் கோபின்ர முகராசி செய்யுற வேலை..
என்னா ஒரு பதிவுத்தலைப்பு...
நானும் பதறியடிச்சிட்டு ஓடி வந்து பாத்தா சோக்கா சிரிச்சிகினே போஸ் குடுத்திருக்காரு அண்ணாச்சி...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்..
லோஷன் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர்பதிவு அஞ்சலோட்டக் கோலை ஜனா அண்ணர் எனக்குத் தந்தார். இதை நானும் நாலு பேரிட்ட குடுத்து தொடர்ந்து ஓடுவம்... நான் அழைப்பவர்.
அஸ்வின் - பலதும் பத்தும் கலந்து எழுதும் யாழ் இந்து வழித்தோண்றலின் ரஜினி பற்றிய பார்வை எப்படி?
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...