சுழன்றுகொண்டிருக்கும் காலமே
என் சிந்தனைக்காக நிறுத்திக்கொள்
கொஞ்சம் உன் ஓட்டத்தை
இல்லையேல் சிந்தனை முடிகையில்
ஓடியிருப்பாய் ஓராயிரம் நொடிகள்
கல்லெறிந்த இடமெல்லாம்
தலை தட்டுப்படும் உலகில்
யாருக்காய் பிறந்தேனோ.?
எனக்காய்தான் பிறந்தேனோ.?
கண்களில் முட்டுவது உதட்டளவு
சிரிப்பில் உடைதரித்த விலங்குகள்
ஊர்திகளில்உல்லாசமாய்
கண்ணீராய் முட்டுவது கண்களின்
சிரிப்பில் உணர்வுடுத்த மனிதர்கள்
ஊர் ஒதுக்க வனவாசமாய்
ஊரினில் நிசப்தம் நிலவினும்
உள்ளத்தில் நிசப்தத்தை நின்று
கொலை செய்யும் நெருடல்கள்
இலட்சியம் என்ற பெயரில்
என்னுள் பலர் கனவுகள் திணிப்பு
அதனுள் என் கனவுகள் புறக்கணிப்பு
பாசம் ஐந்தடி பாய அதுதாண்டி
பணம் எட்டடி பாய்கிறது அதை
எட்டிப்பிடிக்க நினைத்தால்
எட்டப்பன்கள் தட்டிவிடுகிறார்
இறைவனின் படைப்புகளில்
பல பரிணாமம் அதில் சில
பரிணாமம் பருவகால நண்பர்கள்
ஐந்திலே கொடுத்ததை - அவன்
ஐம்பதுவரை விடுவதில்லை
அன்றிலில் கொடுத்து பின்
தென்றல் போக்கில் பறிக்கிறான்
அன்பெனும் தோல் போர்த்தி பல
உறவுகள் தொடர் படையெடுப்பு
சொந்ததோலா இலை புலித்தோலா
அறியாது ஆறுமுறை தோற்றிட்டேன்
ஏழாவது படையெடுப்புக்கும்
எதிர்வுகொள்ள தயார் என் மனம்
அதில் முக்கிய சூத்திரதாரி காதல்
என்னுள் சுமையோடு சுமையாக
சுகம் என்ற சுமையாக
ஒட்டிக்கொள்கிறது இன்று
இந்த சுகத்தின் சுமை சுமையோடு
சுமையாக என்னையும் பூமிக்கு
சுமையாக மாற்றபோகிறதா?
என்ற ஆவலில் காத்திருக்கிறேன்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 comments:
ஆறு முறை காதலில் தொற்றீர் கலா? ஏழாவது வெற்றி அழிக்க எங்கள் வாழ்த்துக்கள்!
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...