• Monday, December 27, 2010

    சூப்பர் ஸ்டார் - 10 - ரசித்தவை

    என்னை தொடர் பதிவுக்கு அழைத்த வரோ அண்ணாக்கு நன்றிகள்..எனக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்களை உங்களோடு பகிர்கிறேன்.. ரெண்டு வயசு இருக்கும் போதே ரஜினி படம் விசிலடித்து பார்க்குமளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன்.. சூப்பர் ஸ்டாரின் கொலை ரசிகன் அதனால் தான் சூப்பர் ஸ்டார் பேரை மிஸ் யூஸ் பண்ணுறவங்க மேல கொலை வெறி..(யார் மேல எண்டு கேக்காதீங்கோ.. அந்த பயலுண்ட படத்துக்குதான் வெயிட்டிங்)

    1)ஊர்க்காவலன் 



    ரஜினி ராதிகா கூட்டணியில் ஒரு கலக்கலான நகைச்சுவை திரைப்படம் .. இருவருக்கும் இடையான காதல் காட்சிகளில் வரும் நகைச்சுவை எத்தனை தடவை ரசித்தாலும் மீள சிரிப்பூட்டும். நல்லதொரு நகைச்சுவைப்படம் , குடும்ப செண்டிமெண்ட் படமும் கூட. வில்லனாக மலேசிய வாசுதேவன் மற்றும் ரகுவரன் நடித்திருப்பார்கள்.

    2) சிவா 

    ரகுவரன் ரஜினி கூட்டணியில் மறக்கமுடியாத த்ரில்லிங் திரைப்படம்.. இதில் ஷோபனா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரஜினி குதிரையில் வரும் காட்ச்சிக்கும், ரஜினியை கொல்ல தேடும ரகுவரனுக்கும் ரஜினிக்கும் இடையான காட்சிகளுக்கும் படத்தை எத்தனைதடவை வேண்டுமானாலும் பாக்கலாம்..

    3)குரு சிஷ்யன்

    ரஜினி , பிரபு, கௌதமி, சீதா, ராதா ரவி , ஷோ ,விணு ஷக்கரவத்தி மற்றும் மனோரம எண்டு ஆளாளுக்கு காமெடியில் பிச்சு உத்தற புதையல் தேடும் கதையை கொண்ட திரைப்படம். ரஜினி பிறப்பு செய்யும் அடாவடிதனங்கள் காமெடி , போலிஷ் அதிகாரியான கௌதமி ரஜினியை மேலதிகாரி எண்டு நினைத்து கதைக்கும் காட்சிகள் சூப்பர்..

    4) படத்துண்ட பெயர் மறந்துட்டேன்..

    அழகான குடும்ப கதை. தவறான புரிந்துனர்வால் மனைவியை விட்டு பிள்ளையுடன் வாழும் ரஜினி இறுதியில் மனைவியுடன் சேர்வதாக அமைந்திருக்கு. ரசிக்கக்கூடிய காதல் , குடும்ப படம். ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி  நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். படத்தின் பிற்பாதியில் அவர் கையில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதுதான் தன் பிள்ளை என்று நினைத்து வாழ்கிறார். இறுதிக்கட்டத்தில் உண்மையான பிள்ளையால் ரஜினியுடன் சேர்கிறார். ப்ளீஸ்.. யாராவது படதுண்ட பெயர் தெரிஞ்சா சொல்லுங்களேன்..
    நன்றி தர்ஷன்.. படப்பெயர் நான் அடிமை இல்லை.. இதில் வரும் இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை..


    5) பில்லா

    பாலிவூட்டிலிருந்து ரீமேக் செய்யபட்டிருந்தாலும் ரஜினிக்காகவே செய்யப்பட்ட கதை போல கச்சிதமானது. வில்லன் நடிப்பில் பிச்சு உதறும் ரஜினிக்கு மற்றுமொரு வாய்ப்பு.. ரெட்டை வேடத்திலும் ரஜினி கலக்கி இருப்பார்.. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ''மை நேம் இஸ் பில்லா'' மற்றும் ''வெத்திலையை போட்டேண்டி'' பாடல் இன்று கேட்டாலும் ரீமக் பாட்டை விட கிறக்கம் தரும்..

    6) பாட்ஷா

    படத்த பத்தி சொல்லவே தேவல. ரஜினி ரகுவரன் கூட்டணியில் சூப்பர் டூப்பர் ஹிட் படம். ரஜினியின் ஸ்டைல், அந்த பேச்சு மறக்கவே முடியாது.. ரஜினிகெண்டு புது வெறித்தனமான ரசிகர் கூட்டம் இப்படத்தின் பின் இன்னும் அதிகமானது.  படத்தின் இசை தேவாவின் கைவண்ணத்தில் பக்க பலமாய் அமைந்தது. ''நான் ஆட்டோகாரன் '' மற்றும் '' ஸ்டைல் ஸ்டைல் தான் '' பாடல் இன்றும் படி தொட்டி எங்கும் ஒலித்திட்டுதான் இருக்குது.

    7) அண்ணாமலை

    ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பெயரை வாங்கி தந்த திரைப்படம்..(நூறு படம் நடிச்சும்கூட  சூப்பர் ஸ்டார் என்று பேர் போடல மனுஷன்.. ஆனா இப்போ.. ) குஸ்பு ஜோடியாக நடித்து முற்பாதியில் நகைச்சுவையோடு கதை நகர உதவியிருப்பார்.. பாம்ப பாத்து பயபிடுற காட்சி ஸ்ஸ்ஸ்ஸ்... ரஜினி நடிப்புல ஆஸ்கார் வாங்கிட்டார். துரோகம், கடும் முயற்சியை  மையமாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படம்.

    8) முத்து


    மிக பெரிய நட்சத்திர பட்டாளம். முதற்பாதி காமடி.. பிற்பாதி உருக்கம் தியாகம். ரகுமானின் வித்தியாசமான இசை. கே. எஸ். ரவிக்குமாரின் ரசிக்கக்கூடிய காட்சிகள் என்று ஒரு மிக பெரிய வெற்றிப்படம் உலகம் பூராக வளம் வந்ததென்றால் அது முத்து. இப்படத்தின் பின்பு ரஜினிக்கு ரசிகர்கர் மன்றங்கள் பல ஜப்பானிலும் உருவானதென்றால் முத்து படத்தின் தாக்கத்தை யோசித்து பாக்கணும்.

    9) படையப்பா 

    ரஜினியின் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் மகுடம்போல மேல இருக்ககூடிய படம் என்றால் நான் படையப்பா படத்தைதான் சொல்வேன். நடிகர் திலகத்துடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றுமொரு வெற்றிக்கூட்டனியில் கூடவே ரகுமானின் வெற்றிக்கூட்டனியில் நடித்த மற்றுமொரு படம். பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்.அந்த ஊஞ்சலை இழுத்து போட்டிடு இருக்கிற சீன்ர கிக்கு மறந்துபோயிடுமா என்ன? இதில் நம்ம சூப் ஸ்டாரை விட படையப்பா எண்டு நினைச்சவுடனே நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் வந்துபோவது தவிர்கமுடியாததாகிறது.

    10) சந்திரமுகி 

    வழமையான ரஜினியின் ஸ்டைல் குறைவாவே போனாலும் ரஜினிக்கான காட்சிகள் குறைவாவே போனாலும் வேட்டைய ராஜாவாக வரும் காட்சிகளில் படத்திற்கான முழு இடத்தையும் மனதில் வேட்டையனாகவே வந்து நிரப்பிட்டு போயிருப்பார். கூடவே ஜோதிகாவின் சந்திரமுகி ஆட்டமும் படத்துக்கு ப்ளஸ்.
    நான் அதிகமாய் ரசித்த ரஜினி படங்களுள் எந்திரன் வராதது வருத்தமே.. இத்தொடர் பதிவை எழுத தொடர்ந்து நான் மைந்தன் சிவா ஐயாவை அழைக்கிறேன்.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Post Comment

    11 comments:

    நிரூஜா said...

    ம்...! சிறந்த படத்தெரிவுகள்.

    தர்ஷன் said...

    அருமையான தெரிவுகள்,
    நீங்கள் மறந்த படம் "நான் அடிமை இல்லை"

    யோ வொய்ஸ் (யோகா) said...

    good selections

    Ashwin-WIN said...

    @நிரூஜா said..
    நன்றி அன்பு ஆருயிர் செல்ல நண்பி நிருஜா..

    @தர்ஷன் said..
    நன்றி தர்ஷன் பெரிய ஹெல்ப்கு...

    @யோ வொய்ஸ் (யோகா) said...
    நன்றி வொய்ஸ் (யோகா)

    Jana said...

    "நான் அடிமை இல்லை" அருமையான ஒரு திரைப்படம். தாங்கள் குறிப்பட்ட பாடல் தவிர, வா..வா..வசந்தமே என் கார்காலமே! என்றபாடலும் அருமை.
    சுப்பர்ப்.

    Kiruthigan said...

    நீங்கள் ரசித்தவை அனைத்தும் தரமான படங்கள்

    Ashwin-WIN said...

    @Jana said...
    //"நான் அடிமை இல்லை" அருமையான ஒரு திரைப்படம். தாங்கள் குறிப்பட்ட பாடல் தவிர, வா..வா..வசந்தமே என் கார்காலமே! என்றபாடலும் அருமை.
    சுப்பர்ப்.//
    இன்றுவரை நான் திரும்ப திரும்ப பார்க்க நினைக்குற படம். ஆல்வேஸ் சுப்பர்..
    நன்றி ஜனா அண்ணா

    @Cool Boy கிருத்திகன். said...
    நன்றி Cool Boy

    Unknown said...

    நன்றி ஐயா என்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு...

    ஷஹன்ஷா said...

    நல்ல ரசனை....அருமை....

    KANA VARO said...

    நல்ல தெரிவுகள் தான் தம்பி!

    Unknown said...

    மிக அருமையான தெரிவுகள்,நானும் தலைவரின் ரசிகன் தான் இவை போலவே அதிசயப்பிறவி, மாப்பிள்ளை, ராஜாதிராஜா, அருணாச்சலம் முதலிய படங்களும் வெகு அருமை, (ப.தர்சன்)

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner