• Tuesday, May 11, 2010

    எழுத ஏதுமில்லாத நேரம்.......கொட்டிய தத்துவம்.

    அன்பு-விலங்குகள் கூட்டத்தில் காட்டுவது,மனிதன் தனிமையில் தேடுவது.

    "செய்வினும் சேரக்கூடும் சேர்ந்ததும் ஏப்பம்கொள்ளும்
    மறைந்ததும் மாளத்தூண்டும்-அன்பு."




    பருவக்காதல்-ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை,வேலையில்லா பருவத்தில் காதல் ஒரு வேலை.
    தெளிந்தகாதல்-காதலில் வளர்ந்த தாடியில் பூத்த புதுக்காதல்.
    திருமணத்தின் பின் காதல்-ஒளிவு இல்லை,மறைவு இல்லை, எதிர்பார்ப்பில்லை இறப்புவரை முடிவில்லை.

    "கணமது உணர்வது கொண்ட கோலம்
    பிரிதலிலும் புனர்வதுபேர் - காதல்."




    கல்வி-பறங்கிக்கு கோட்டை காட்டியது போல. ஒரு வேலைக்காய் பல வேலை செய்வது.
    காதகு தொலைவில் இலக்கு அதற்கு ஊர்பல தாண்டி உலகது சுற்றி வாலிபம் தெறித்து வரையறை சொல்லும் முறைமை.

    "கற்றவர் யாவரும் உலகுக்குற்றவர் மற்றவர்
    யாவரும் ஊருக்குள் விற்பன்னர்."


    அரசியல்-கறைபடிந்த குற்றங்களை குறையில்லாது மேடையேற்றும் நாடகத்தின் தலைப்பு.

    "புலையனும் தலைவனாகி தர்மமும் நிர்மூலமாகி
    நீண்டுகிடந்தும் நிரூபிக்கப்படாத உண்மை."


    ஆன்மிகம்-தனி அறையில் கேட்கப்படும் தவறுகளுக்கான மன்னிப்புகள்.
    ஊருக்குப்பயந்தவன் உயிருக்காய் தாங்கிக்கொள்ளும் ஸ்பரிசம்.

    "கடவுளின் பெயரில் காசுகள் புறலின்
    கூற்றிளைத்தவன் உறைவிடம் தேடின்."


    பகுத்தறிவு-அதிகம் பேசிக்கொள்பவர்களின் எண்ணத்தில் உதிப்பது.

    "சிந்தனைசீர்பெரின் நிந்தனை செய்விடின் உண்மைக்கு
    பயங்கொள்ளின் உயிர்பெறும் பகுத்தறிவு."  

    .
    .
    .

    Post Comment

    1 comments:

    Unknown said...

    Supperbb... Great thought.
    keep it up.

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner