நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன் படி துடுப்பாட்டத்தை தொடங்கிய யாழ் இந்து அணி 58 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய டிலக்சன் 35 ஓட்டங்களையும் பார்த்தீபன் 30 ஓட்டங்களையும் பிரகாஷ் 20 ௦ ஓட்டங்களையும் இந்துக்கல்லூரி அணி சார்பில் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கார்த்திக் மற்றும் பிரதீஸ் தலா மூன்று விக்கெட்டுகளையும் ராகுலன் இரு விக்கெட்களையும்

எடுத்தனர்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து அணி இன்றைய ஆட்ட நேரமுடிவின் போது 78 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. இதில் சாம்பவன் 20 ஓட்டங்கள் தவிர ஏனைய யாவரும் ஒற்றை இழக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த்தனர்.
யாழ் இந்துக்கல்லூரி சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய அணித்தலைவர் நிருஷன் 7 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார். அத்தோடு சிவந்திரன் இரு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

NIRUJAN (capt of JHC)
பலம் வாய்ந்த நிலையில் இருக்கும் இந்துக்கல்லூரி நாளையும் இவ்வாறான ஒரு சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தி,வானிலையும் ஒத்துழைத்தால் இப்போட்டியில் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெறுவது நிச்சயம்.
1 comments:
Jaffna Hindu rocks
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...