அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே.. இந்த இடத்துலே நான் யார் என்று சொல்லிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடம் இல்லை ஏனெனில் மக்களோடு மக்களாக, பதிவர்களோடோ பதிவர்களாக நானும் உங்கள் இன்ப துன்ப கும்மிகளில் பங்கெடுத்தவன்.. இருந்தும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
நான் அஸ்வின்.. பெயரின் அர்த்தத்திற்கு ஏற்றாற்போல் மிகச்சிறந்த பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளன் மற்றும் சிறந்த சுழல்பந்து வீச்சாளன். அகராதியில் அப்படி அர்த்தம் ஏதும் இல்லையே என எதிர்க்கட்சிக்காரர்கள் பிதற்றலாம்.. அவர்கள் எங்கே மக்களோடு மக்களாக 'கோ' படமோ இல்லை ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மாட்ச்சோ பார்த்திருக்கப்போகிறார்கள்.
இதுவரை நான் மக்களுக்கு எந்த துன்பமும் செய்ததில்லை. நிலை தடுமாறும் வேளைகளில் ஏதோ மாதத்தில் ஒன்றிரண்டு பதிவெழுதி படிப்பவரை கொடுமைப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் நான் எதிர்க்கட்சிக்காரர்கள் போல் மாதத்தில் முப்பது நாளும் கொடுமைப்படுத்தவில்லை.. உங்களை கமென்ட் அடிக்க வைத்து உங்கள் பொன்னான எழுத்துகளை வீணடிக்கவும் இல்லை. இன்றைய தேதியிலே என்னுடைய சொத்து மதிப்பு வெறும் 55 பதிவுகள் மாத்திரமே. ஆனால் திரு.லோசன் திரு.ஜனா போன்றோரின் சொத்து மதிப்பு தலா 542, 243 பதிவுகள் அதிலும் அரசியலுக்கு வந்து வெறும் சொற்ப நாட்களிலேயே மதி சுதா , மைந்தன் சிவா போன்றோரின் சொத்து மதிப்பு 150 ஐ தாண்டியுள்ளது.. இது அத்தனையும் மக்களை சேரவேண்டும் .
இது தவிர இவர்களுக்கு ப்ளாக்,வேர்ட் பிரஸ் , டுவிட்டர், பேஸ் புக் போன்ற பல வங்கிகளில் மேலும் பல சொத்துக்களை தமிழ் பெயரிலும் ஆங்கில பினாமிகளின் பெயரிலும் வைத்துள்ளார்கள். இருந்தும் என் கட்சியோடு சேர விருப்பம் தெரிவித்த திரு.புல்லட், திரு.ஆதிரை, திரு. சுபாங்கன்,திரு.சதீஷ் போன்ற மக்கள்தொண்டு தலைவர்கள் தங்கள் சொத்துக்குவிப்பை நிறுத்தியுள்ளார்கள். இது அத்தனையும் எங்கள் கட்சிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. நான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதை நானே சொல்லகூடாது. இது வாசிக்கும் மக்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படிப்பட்ட நானே எதிர்க்கட்சியினரையும் மரியாதையாக 'திரு' என்று அழைக்கிறேன். என்னை இதுவரை யாராவது திரு.அஷ்வின் என்று அழைத்திருக்கிறார்களா.???
நான் என்னுடைய அகில உலக பிரச்சார செயலாளராக பிரச் சாராய பீர் யங்கி சாரி.. பிரச்சார பீரங்கி வெடிவேலுவை நியமித்த போது இந்த எதிர்க்கட்சிகள் என்ன கொடுமை சார் என்றார்கள். அதே கொடுமையால் எதிர்க்கட்சிகளின் சொத்துமதிப்பு கூடப்போகிறது. இதைக்காட்டி நான் தேர்தலில் ஜெயித்துவிடப்போவது உண்மை.
என் தலைமையிலான பதிவர் சங்க ஆட்சி பொறுப்பேற்கும்போது நான் செய்யவிருப்பதை உங்களுக்கு வாக்குறுதிகளாக தருகிறேன்..
** முதற்கட்டமாக பதிவர் சங்க அதிகார மையத்தை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவேன். தற்போதைய கோட்டையானது ஹாக்கிங் , அநாமதேய கமெண்டுகள் போன்ற மக்கள் தொண்டுகளை ஆற்ற பொருத்தமான இடமாக இல்லை.
**எந்திரப்பொறி மூலமான தமிழ்மணம், இன்ட்லி இன்னபிற வாக்குபதிவு முறைகளை மாற்றி அமெரிக்க ஐரோப்பிய வாக்குபதிவுக்கு இணையான பழமை மிக்க வாக்குபதிவை கொண்டுவருவேன். அது அமுலுக்கு வரும் பட்சத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள கடதாசியில் பதிவு செய்து தங்கள் கம்பியூட்டர் சிடி றோம்மில் போடவேண்டும். இதன்மூலம் வாக்கு மோசடிகள் தவிர்க்கப்படும். அத்தோடு இப்போதிருக்கும் ப்ளஸ் ஓட்டு, மைனஸ் ஓட்டு முறைகள் முற்றாக நீக்கப்பட்டு பெருக்கல் ஓட்டு , பிரித்தல் ஓட்டு முறை கொண்டுவரப்படும்.
**இதுவரை பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சொத்து மதிப்பு வரையறையை மாதத்திற்கு ஐந்திலிருந்து பதினைந்தாக உயர்த்துவதுடன், பெண்களாக மாறியிருக்கும் ஆண் பதிவர்களுக்கு பிரசவ விடுமுறையாக ஆறுமாதத்தை வழங்குவதுடன் போனசாக மாதத்திற்கு இரண்டு பதிவு சங்கத்தால் வழங்கப்படும்.
**சொத்துமதிப்பு வருடத்திற்கு இருபத்தைந்து என இருக்கும் பதிவர்களுக்கு வறுமைக்கோட்டின்கீழ் மாதம் தலா ஐந்து பதிவுகள் சங்கத்தால் வழங்கப்படும்.
**இரவுபகலாக விழித்திருந்து பதிவுகளை சுடுவதன் மூலம் வாழ்க்கை நடத்திவரும் பழங்குடியினருக்கு மாதாந்த போனசாக ரெண்டு சுட்ட பதிவு வழங்கப்படும்.
**மொக்கைப்பதிவர்களுக்கு பதிவுலகில் செம்பதிவர் அந்தஸ்த்து வழங்குவதுடன் மொக்கைப்பதிவுகளை வழக்கும் நோக்கில் செம்பதிவர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடாத்துவதுடன் விழாவுக்கு பிரம்மாண்டங்கலான நமீதா, சகீலா மற்றும் டாப்சி,அமலாபால் கலந்துகொள்வர்.
**ஓட்டுகுத்தும் ஒவ்வொருவருக்கும் ஓட்டுக்கு தலா நான்கு பலானா பதிவுகள் இரகசிய மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறான மக்கள் நேய கடமைகளை ஆற்ற எனக்கு ஆணையிடும் முகமாக இந்த பதிவில் ஓட்டுகளை குத்தி என்னை பதிவர் சங்க தலைமை பொறுப்பேற்க செய்யுமாறு அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம். எஸ்கேப்..
9 comments:
ஹா...ஹா...ஹா... செம நக்கல் நையாண்டி கலக்கல்.
நண்பரே இதைப்பற்றிய சூடான பதிவு ஒன்று இன்று காலை ரிலீஸ்...
கொஞ்சம் முந்திக்கொண்டு விட்டீர்கள்..பரவாயில்லை..
கலக்கலோ கலக்கல்!!! உங்களை தலைவராக்க என்ன செய்ய வேண்டும் ???
@தமிழ்வாசி - Prakash
நன்றி தமிழ்வாசி வருகைக்கு..
//ஹா...ஹா...ஹா... செம நக்கல் நையாண்டி கலக்கல்//
நான் சீரியசா பேசிட்டிருக்கும் போது நக்கல் என்கிரியலே.. என்னைய பாத்தா சிரிப்பு பதிவர் மாதிரியா இருக்கு?
@மைந்தன் சிவா
கொஞ்சம் சூடாத்தான் இருக்கு பாத்தேன்..
@Anuthinan S
//கலக்கலோ கலக்கல்!!! உங்களை தலைவராக்க என்ன செய்ய வேண்டும் ??//
பெரிசா ஒன்னும் வேணாம்.. மேல நான் சொன்னமாதிரி புராதன முறையில் வாக்களியுங்கள்..
அடேய் சொல்லாமல் கொள்ளாமல் அதிகார மைய்யத்தினை கையிலெடுத்துவிட்டால் அதனால்தான் தற்போதைய தலைவர் அவசரமாக யாழ்ப்பாணம் சென்றாரோ தெரியவில்லை
என்னதான் அதிகார மையத்தை கையிலெடுத்ததென்று நீர் அறிவிச்சாலும் அடுத்த பதிவர் சந்திப்புடன்தான் வேணுமென்றால் அதிகார தலைவர் பதவிதை வழங்கலாம் இல்லாவிட்டார் பார்ட்டி ஏதாவது ஒழுங்கு செய்து தந்தால் அன்னே உமக்கு அதிகார மைய்ய தலைவர் பதவி வழங்கப்படும்
என்னுடைய ஆதரவு நிச்சயம். ஒனறு திரள்வோம். அதிகார மையத்தை மாற்றுவோம்! :D
grrrrrrrrr
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...