பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
மெல்லிய மலரும் ஆர்ப்பரிக்கா சிறு நதியும்
தண்ணிய தென்றலும் தாழையின் வழுவலும்
மென்மையின் அர்த்தம்தானே.. இந்த
மென்மையின் அர்த்தம் சொல்லும்
பெண்மையின் வடிவமன்றோ இவையாவும்
நீதியும் பிழைத்துப்போய் நெறியும் தவறிடுதே
வஞ்சகத்துக்கு பெயர்சொல்ல ஒரு கூனி
வன்முறை வழிகூற மிகு கண்ணகி
கபட நாடகமேற்ற ஒரு கைகேயி
சூத்திரதாரகையாய் சுற்றம் கெட ஒரு சூர்ப்பனகை
விபரீதமறியாது சிறுபிள்ளைபோல் பொன்மான்
கேட்கும் சீதையரும் இன்றும் உளரே .!
பெண்மையின் விரிவு பேதமைதானோ..?
பெண்மையின் விரிவு பேதமைதானோ..?
வெற்றியின் பின் அணுகும் பெண்மைதானோ
வீழ்ச்சிக்கும் விருந்துகொடுத்தாள்.?
ம்ம்.. உளறித்தீர்க்கிறேன் .
பார் போற்றும் பரதனை வெண்கண் சிறு
குட்டன் எனச்சொன்ன இலக்குவன்
நிலைதான் இன்று எனக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 comments:
///...தண்ணிய தென்றலும் தாழையின் வழுவலும்
தூரத்து நிலவும் துயரில்லா தோகைமயிலும்
மென்மையின் அர்த்தம்தானே...////
அருமை சகோதரா மென்னைக்கு இப்படியும் ஒரு வடிவமிருக்கா..?
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...