நக்கலும் நளினமுமல்ல
நாள் நடப்புச்சொல்கின்றேன்
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
முட்கம்பி வேலிகளில்
ஊஞ்சலிடும் முல்லைகள்
ரிப்பன்களோடு சேர்ந்து
நெய்துவிட்ட தாவணியோடு
சில்வண்டு இரையும்
இசையில்
மூன்று நாள் உணவை இரைமீட்கும்
கட்டுண்ட கால்நடைகளாய்
கனவுகள் தொலைத்து..
தலைப்பிள்ளை தொலைத்து
தாரமும் தொலைத்து
தலையணை தொலைத்து
உறக்கமும் தொலைத்து
உண்ணாதுறங்கும் உயிரற்ற உயிர்நாடிகள்..
ஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல்
அதில்தான் மூன்று வேளை பங்கு
மிஞ்சினால் அடுத்தநாள் பழங்கஞ்சி
பழகிப்போச்சு இது ரொம்ப நாளா..
தொழில் இன்று தொழில் தேடல்
கனவின்று கனவுகாண உறக்கம்
நனவின்று உசிராச்சும் நிலைச்சிடுச்சே
உணவின்று பிள்ளைங்களுக்கு கொடுத்து மிஞ்சினால்
இன்றைய சாதனை ஓடுபோட வழியில்ல ஆனா
தலா ரெண்டு ஒட்டு போட்டாச்சு
ஒய்யாரப்பேச்சுகள் தான் ஒரு பயனும் கிடைச்சதாயில்ல.
ஆனை விலை கேட்ட நாம வெத்தில விலை பேசுறம்
கொழும்பு பயணம்
கோடைகால விடுமுறைக்கல்ல
கொள்ளிவைக்க பெத்த புள்ள கம்பிக்கு அந்தப்பக்கம்
உசிரோட இருக்கான்னு எட்டி பார்க்க
அயலுக்கும் உறவுக்கும்
அண்ணனுக்கும் அத்தைக்கும்
மாமனுக்கும் மச்சினனுக்கும்
ஒன்றுவிட்ட அண்ணைமயனுக்கும்
ஒரே நாளில் திவசப்படையல்..
ஏதுண்டு இவர்களுக்கு அதனால்தான்
ஏதிலார் இவர் அவர் நாட்டிலேயே.!
இத்துணையும் அங்கு நடக்க
இங்கு மானாட மயிலாட
மங்கை மாருதி போலாட
கொழும்பு நகர் விடுதிகளில் களியாட்டம்
அத்தனையும் உளுந்து வித்த அப்பன் காசில்
யாழுக்கு பதினோருமுறை படையெடுப்பு
கூடவே நோலிமிட் உடைஎடுப்பு
மயில் நோட்டு மலிஞ்சு போச்சு
மனுசர் மனம் மெலிஞ்சு போச்சு
வயிற்றுப்பசிக்கு ஒரு வழி இல்லை
பலர்க்கு வாய்மொழிக்கு முன்னூறு கோடியில் ஆராய்ச்சி விழா.
சிந்தனைகள் பலிக்குதாம் அந்தப்பக்கம்
நிந்தனைகள் மட்டும் திணிக்குதாம் இந்தப்பக்கம்.
இத்தனையும் செய்துவிட்ட,
செய்யக்கண்டுவிட்ட நாம் நல்ல மனிதர்களே..
என்றும் நல்ல மனிதர்களே..
இருப்பம் இப்படியே...!
பின்.குறிப்பு: எழுதுறதுக்கும் சொல்லுறதுக்கும் நிறைய இருக்கு ஆனால் வாசிக்குற உங்களுக்கு பொறுமை இருக்காது என்குரதால இத்தோட நிறுத்திக்கிட்டம்.
நன்றி-பிரேம் கோபால் & ப்றேம்னி.
5 comments:
very very nice one.... touching..:)
super da shoppi..
மனிதர்கள் இருந்தால் தானே மனிதாபிமானத்தை எதிர்பார்க்க....
புதுசா ???????????????????????????
உண்மையின் உளறல்கள்!!!அருமை
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...