கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த இங்கே கேட்கலாம்..
|
காதல் கனவுகளில் கரைசேர்ந்த ஓடம்
உள்ளங்கள் சேர்ந்து உணர்வுகளை உருக்கும் உன்னத உணர்வு
பங்குனி வெயிலில் பருவம் பொய்த்து பெய்த மழை
-அழகே என்னை காதலி-
அன்று என் நெஞ்சில் பூங்காற்றாய்
புணர்ந்தவள் நீதானே
புன்னகை சிந்தி பிடித்திழுத்தாய் உன்பக்கம்
சிவந்த உன் உதட்டோரத்தால்
உன் விரல்கள் மீட்டிய கூந்தலின் இசையில்
என் மனம் நர்த்தனம் ஆடியதே
நெற்றிப்பொட்டு நீ என்னை சிறைப்பிடித்த செம்மொட்டு
ஒரு நொடி உயிர் பிரிந்தேன் துடித்த உன்
ரோஜா இதழ்கள் இரு இமைகளில் விழுந்து
மறுபடி உயிர் பெற்றேன் உன் பேரு மூச்சில் நானும்
நிலவில் என்னை கட்டிப்போட்டு
நீர்தர மறுக்கும் செவ்வாய் அதில்
நனையாது மூழ்கி விட்டேன்
என்னை எனக்குள்ளே
தொலைத்துவிட்டு தேடுகிறேன்
கண்கள் உறக்கத்தை தேட
கனவுகள் உனக்காக கூட
இரவுகள் நிலவுக்காய் ஏங்க
நீ மட்டும் இரவினில் தூங்க
நான்மட்டும் தாலாட்டு பாட
கணம் கணம் ரணங்கள் நாடி
கண்ணீரில் சுவைகள் தேடி
காதலன் ஆகிவிட்டேனடி.
சகாராவின் தாகங்கள் நான்
நைல் நதியின் நளினங்கள் நீ
ஆக்ராவின் அதிசயம் நீ
உனக்குள் உறைந்துவிட்ட சாஜகான் நான்
இங்கிலாந்தின் இம்போர்ட் அழகி நீ
இன்னமும் L -போர்ட் அழகன் நான்
ஏற்றுக்கொள்ள ஏனம்மா தயக்கம்
ஏக்கத்தின் தாக்கத்தில் நானம்மா
உன்னுள் மனத்தால் சேர்ந்தேன்
அந்த நொடி உன்னிடம் அனுமதி கேட்கவில்லை
உனைவிட்டு உடலால் பிரிகிறேன்
இந்தநொடி உன்னிடம் நானில்லை
என்னுள்ளும் உயிரில்லை
உன்னை காணும் வேளை எல்லாம்
கண்களுக்கு இமை சுமையடி
இன்று உனைத்தேடும் வேளை எல்லாம்
இமைகளுக்கு நீர் சுமையடி
நித்தம் நித்தம் உன் சந்தம் கண்டுதான்
என் இதயம் துடிக்கப்பழகியது
இன்று சத்தமின்றி உறங்க துடிக்கிறது
தினம் தினம் செத்துப்போகிறேன்
ஆனால் உயிருடன் இருக்கிறேன்
எத்தனை நாட்கள் இந்தப்பயணம்
நீயின்றி நானும் என் நினைவின்றி நீயும்
எத்தனை நாட்கள்....
ஒவ்வொரு காதலர்த்தினமும்
நமக்காக மலரவேண்டும் என்பேன்
நீ என்னை மறவாது இருக்க
பரிசுகள் பல தேடவேண்டும் என்பேன்
இன்று என்னை மறந்துசென்ற உன்னை தேடுகிறேன்
கண்களில் பட்டுவிடு அது ஒன்று போதும்
உன்னிடம் இனிநானும் காதலை சொல்லமாட்டேன்
என் தொல்லை இனி உனக்கில்லை
செத்துவிடுவேன் என்றெண்ணாதே
இனி என் கண்கள்தான் உன்னிடம் போர்தொடுக்கும்
அதன் துடிப்புகள் பேசும்
அழகே என்னை காதலி..
அழகே என்னை காதலி..
6 comments:
cute one...:D
சிறப்பா இருக்கு... வாழ்த்துக்கள்...
nice!!!!!!!!!!
கலக்கிடிங்க அஸ்வின் கலக்கிடிங்க..வாழ்த்துக்கள்
nice man....
Lovely :)
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...