சிறகடித்து பறக்கிறது பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல
கவிதையில் நனைந்த காகிதங்களும்
பரபரப்பை நிற்கிறான் பாமரன் மட்டுமல்ல
சுடர்ஒளி வீசும் வீரகேசரி தினகரனும்தான்
உழவன் விதைத்த நெல்லும் முத்திடுச்சு
இலவம் பஞ்சும் பல காத்திருக்கு
அலங்காநல்லூரில் அலங்கரித்த காளைகளும்
தீராத விளையாட்டுப்பிள்ளையாம் இவன்
அப்போ அசல் தான் யாரோ
காத்திருக்கின்றார் ரிலீசுக்காக
இவையெல்லாம் கூடியிருக்கு காத்திருக்கு
எதற்காக..?
சலசலப்புக்கு குறைவில்லை
கலகலப்புக்கு நிறைவில்லை
குறைபல களைந்தெறிய
நிறைகுடம் ஏந்தி நின்று
காத்திருப்புகள் கனிந்திட கன்னிமகள் இவள்
தைமகளை வரவேற்போம்.
பிறந்திடும் தைமகளை வெற்றிலை வைத்து வரவேற்க தேவையில்லை
நடந்திடும் காரியமெல்லாம் அன்னம் போல் பகுத்துவாழ வாழ்த்துகிறேன்
பிறந்திடும் தைமகளை வெற்றிலை வைத்து வரவேற்க தேவையில்லை
நடந்திடும் காரியமெல்லாம் அன்னம் போல் பகுத்துவாழ வாழ்த்துகிறேன்
அன்புடன் அஷ்வின்.
1 comments:
Nice thought..Happy pongal..:)
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...