வழக்கம்போல விஜய்க்கே உரிய உயிர் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோட இரவு 11 மணி காட்சிக்கு 8 மணிக்கே திரண்டிருந்தனர் ஆரவாரத்துடன். ஒருவாறாக அடித்துபிடித்து உள்ளே நுழைந்து வசதியான சீட்ட தேடி இருக்க ஒருவாறாக நள்ளிரவு 12 மணிக்கு ஏவிஎம் பெயர் திரையில விழ அப்பவே ஆரவாரம் தொடங்குகிறது. அப்புறம் ஓரிரு வினாடிகளில் ரஜனியின் ஸ்டைலில் அறிமுகமாகிறார் நம்ம தளபதி. அப்போ பரந்த விசில் சத்தங்களில் என் காது சவ்வு கிழிந்துவிட்டது போலிருந்தது. (மனசுக்குள்ள ஜோசிததுகோண்டன் இப்பவே சவ்வு கிளிஞ்சுட்டுதேண்டா அப்புறம் தளபதிக்கு வேலை இருக்காதே எண்டு)
நானும்தான் என்ன மறந்து கைதட்டிடன் எண்டா பாத்துக்கோங்களேன். அறிமுகத்திலேயே டாட்டா சூமோவ குதிரையில போய் லாவகமாக மடக்கிபிடிக்கிறார் நம்ம தளபதி. (வேட்டைக்காரன் எண்டு பேர் வச்சாச்சு பின்ன குதிரயகாட்டாடி பிறகென்ன . ) மடக்கி பிடிச்சு நாலு டயலாக் பேசின உடன வருது பாட்டு .. நானடிச்சா தாங்கமாட்டாய் நாலுமாசம் தூங்கமாட்டாய்... .......
நானும்தான் என்ன மறந்து கைதட்டிடன் எண்டா பாத்துக்கோங்களேன். அறிமுகத்திலேயே டாட்டா சூமோவ குதிரையில போய் லாவகமாக மடக்கிபிடிக்கிறார் நம்ம தளபதி. (வேட்டைக்காரன் எண்டு பேர் வச்சாச்சு பின்ன குதிரயகாட்டாடி பிறகென்ன . ) மடக்கி பிடிச்சு நாலு டயலாக் பேசின உடன வருது பாட்டு .. நானடிச்சா தாங்கமாட்டாய் நாலுமாசம் தூங்கமாட்டாய்... .......
படத்துல போலீஸ்காரனா வரவேண்டுமேண்ட ஆசையில போலீஸ் ரவி எண்டு பேர் வச்சுகிட்டு ஊருல நடக்குற அநியாயங்களா தட்டிக்கேகுற ஹீரோவா காட்டபடுறார். ஆரம்பகட்டங்களில இருந்தே நகைச்சுவையில நண்பனா வர்ற சத்தியன், அப்பாவாக வர்ற டெல்லிகணேஷோட சேர்ந்து பின்னி எடுக்கிறார். நான்குமுறையாக பிளஸ் டூ fail பண்ணுற விஜயை டெல்லி கணேஷ் திட்டுற காட்சி நகைச்சுவை விருந்து. பிறகு ஒருவாறாக பரீட்சையில் பாசாகி தளபதி சென்னை வருகிறார் IAS படிப்புக்காக. வரும்போது புகையிரதத்தில் அனுஷ்காவை சந்திக்கிறார். வழமையான நம்ம தமிழ் சினிமா விதிமுறைக்கு அமைவாக கண்டதும் காதல். சும்மா சொல்லக்கூடாது விஜய்க்கு விழுந்த விசில்ல கொஞ்சமும் குறையாமல் விழுது அனுஷ்காவுக்கும். அடுத்து யாராரோ காலேசுக்கு போறாங்க நம்ம தளபதி போகக்கூடாதா என்டுகாட்ட ஒரு வகுப்பறை காட்சி. அதுலயும் தளபதி விட்டுவைக்கேல lecture எடுக்கிற டீச்சருக்கும் அட்வைஸ் பண்ணுறார். பிறகு நானும் எதோ வகுப்பறை நகைச்சுவைகளுக்காக காத்திருந்தேன். அது ஒன்றுதான் முதலும் கடைசியுமான வகுப்பறை காட்சி.


அதேநேரத்துல கத்தியும் வீச்சருவாலும் கூடவே துப்பாக்கிகளும் கதற வில்லன்னுக்கான ஆக்ரோஷ அறிமுகம். மொத்த சென்னையையே கலக்கிகொண்டிருக்கிற வில்லன். அவரது சாகசங்கள். இப்படியே ஒருபுறம் கதை நகர அதேவேளை அனுஷ்காவுக்கும் விஜய்க்குமான சந்திப்புகள் வளர்ந்து காதலாக வெடிக்கிறது. அனுஷ்காவும் விஜயும் வரும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. இனி வில்லனையும் ஹீரோவையும் கொளுவ வைக்கொனுமேள்ள. அதுக்காகவே வில்லனை பெண்ணாசை பிடித்தவனாக காட்டி விஜயின் நண்பியின் மீது வில்லன் கண் வைக்கையில் அமர்களமும் அடிதடியும் தொடங்குகிறது. முதல் சந்திப்பிலேயே வில்லனை தும்சம் செய்துவிடுகிறார் விஜய். ( இதுல சுப்பர் ஸ்டாரையே மிஞ்சி விட்டார் தளபதி. சுப்பர்ஸ்டார் பறந்துபறந்து அடிப்பார், தளபதி அடிச்சா 100 ௦௦ மீட்டர் பறந்து பொய் விழுறாங்க எல்லாரும்.) இதனால் விஜய் சக வில்லன்களாலும் வில்லன்களது எடுப்பு போலீஸ்ஆலும துரத்தபடுகிறார். பின்னர் போலிசால் கைதுசெய்யப்படும் விஜய்க்கு கொலைத்திட்டம் தீட்டபடுகிறது. அதன் படி விஜயை சுட்டுகொள்ளும் நோக்கத்தோடு போலீஸ் பட்டாளம் காட்டுவழி கூட்டிச்செல்கிறது. அங்கு விஜய் தப்பித்தி ஓடுகிறார் காட்டினுள் ( இங்கயோ புலி உறுமுது பாட்டு வருதோ எண்டு கேக்காதிங்கோ.) நாலாபக்கமும் சிதறும் வேட்டுகளின் மத்தியில் (சிக்குவாரா நம்ம தளபதி..) தப்பித்து அருவியில் குதிக்கிறார் தளபதி. அப்படியே நிப்பாட்டி போடுறாங்க இடைவேளை எண்டு.

மொத்தமாக முதல்பாதி காமெடி சரவெடிகளை தூவியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்திருந்தேன் சீட்டில். மனதுக்குள் இனி இப்படி இருக்குமோ அல்லது அப்படி இருக்குமோ எண்டு ஆயிரம் பழையபடங்களை போட்டுபாத்துவிட்டேன். இருந்தாலும் தரணியின் உதவி இயக்குனராக இருந்த பாபுசிவன் புதுசாக ஏதாவது சொல்லுவார் ஏன்டா நம்பிக்கை.
இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியது. ஒருவாறாக 3 .15 க்கு ஓய்ந்தது. என்ன மீதி கதைய சொல்லேல எண்டு பாக்குறியலா ? அத நம்ம இளைய தலைவலியிண்ட சாரி தளபதியிண்ட பகவதி படத்தின்ட இடைவேளைக்கு பிறகு இருக்கிறத பாத்து தெரிஞ்சுகொல்லுங்கோ.
தளபதி படம் தொடங்கேக்கையே சிம்போலிக்கா பாடினார் நான்தான் புரிஞ்சுகல, "நான் நடிச்சா தாங்கமாட்டாய் நாலுமாசம் தூங்கமாட்டாய் வீடு போய் சேர மாட்டாய்.( ஏதோ ஆட்டோகாரநிண்ட புண்ணியத்தால வீட்ட போய் சேர்ந்துட்டன், தளபதியிண்ட புண்ணியத்தால நித்திரைகொள்ள முடியல. என்ன மாதிரி மத்தவங்களும் பாதிக்கப்படகூடாது எண்ட நல்லெண்ணத்துல இத சுடச்சுட (காது சுடச்சுட ) எழுதுறன்.
மத்தபடி படத்துல சிறப்பா சொல்லனும்னா பாடல் இசை மற்றும் பின்னணி இசையினை சொல்லலாம்.விஜயின் நடனம் வழமை போல் ரசிக்கலாம். புதிய இயக்குனர் பாபுசிவன் ஆதிக்கம் படத்தில் குறைவு எண்டே சொல்லலாம். டெல்லிகணேஷ் விஜயின் அப்பாவாக ஒரேஒரு காட்சியில் மட்டும் வந்து சிரிக்கவைத்து செல்கிறார். அவரை இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம். கதை பழைய ரொட்டிதான் கொஞ்சம் வேக வைத்திருந்தார்கள்.
ஆனா கடைசியா ஒண்டு மட்டும் சொல்லுறேனுங்க. வில்லு படம் சூப்பெறோசூப்பர். விஜய் தூரநோக்கு சிந்தனையில படம் நடிச்சிட்டு வாரரெங்கோ. தன்னோட முந்தய படாத ஹிட் ஆக்குரதுக்காகவே செலவழிச்சு (இவரெங்க செலவளிக்குறார். இவர நம்பி படமேடுககுறவங்க பாடுதான்..) அடுத்தபடம் எடுக்கிறார். ம்ம். வேட்டைகாரனை ஹிட் ஆக்க விரைவில் அடுத்த படம் வரும். அதுவரை விஜய் ரசிகர்களே மனச தேத்திகொல்லுங்கோ.
//மொத்தத்தில் இந்த வேட்டைக்காரன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வேட்டையாடியுள்ளான்.//

VEDDAIKKAARAN
//மொத்தத்தில் இந்த வேட்டைக்காரன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வேட்டையாடியுள்ளான்.//
VEDDAIKKAARAN
14 comments:
:)
Intha smileku enna arththam nnaa?
அப்போ சுறா பார்த்துவிட்டுதான் வேட்டைக்காரன் பார்க்கவேண்டும் என்கிறீர்கள்.
@ வந்தியத்தேவன்//
சரியா சொன்னீங்கள் அண்ணா.
( இருந்தாலும் வேட்டைக்காரன் பாக்குற முடிவோடதான் இருக்குறீங்கள்.)
vettaikaran partha apparam eppadi "SURA" Pakka mudiyum.........
ivarathan hospital'a 4 peru pathuttu varanum!!!!!!
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை .
ATM,வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.
ஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.
உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.
அருமையான விமர்சனம்.. வாய்விட்டு சிரிக்க வைச்சது.. பாராட்டுகள்.
@allimuthu
//vettaikaran partha apparam eppadi "SURA" Pakka mudiyum.........//
வேட்டைக்காரன் பார்த்ததுக்கப்புறம் சுறா பார்க்கவேமுடியாது ஆனால் சுறா பார்த்ததுக்கு பிறகு வேட்டைக்காரன் கொஞ்சமாவது பாக்கலாம் எண்டு நினைக்குறன்.
@senthils
//விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.
ஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.//
100 % சரியா சொன்னீங்க
@வெண்பூ
// வாய்விட்டு சிரிக்க வைச்சது..//
கடுப்பாகி விமர்சனம் எழுதினா காமெடி எண்டு சொல்லீட்டிங்களே.
:))
PORAMAILA PONGATHEENGADA...
first nee evan rasigarnu enaku msg. panni vidu nan unakku AAPPU vachu anupirane... okva..
THALAPATHY oda ella padamum onna irukkunu solreengalla, tamil cinemavula vandhadhila irunthu love, comedy, sentiment, fight, ipadithan padam varuthu.. itha ellam onna serthu ore padama kudutha UNGALUKKU PORAMA..
solrathu ore story nnu sonnalum athula varra scenes, screenplay & matra visayatha ellam parungada onnava varuthu..
YENDA UNGALUKKU INDHA POLAPPU...
recenta 3 to 4 films thanda action film..
athukku munnadiyellam vera mathirithane vanthathu..
neenga tamil padame parka maatingalada..
PONGADA VENNAINGALA...
NEE TRUE TAMIL RASIGAN ENDRAL
ASAL REVIEW anupungada parpom..
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...