கிரிக்கெட்டின் தாய் நாடு இங்கிலாந்தாக இருந்தாலும் இன்று தந்தை நாடு என்று சொல்லுமளவுக்கு விரிந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட். இப்படிப்பட்ட இந்திய அணியின் சாதனைகளின் பட்டியலில் சேவாக்கின் பங்கு இன்று இன்னும் பலமடைந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளிலே எட்டமுடியா இலக்கென்று எண்ணுமளவுக்கு தனிநபர் ஓட்டமாக 219 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போதுள்ள கிரிகெட் வீரர்களில் சிறந்த அதிரடி வீரர்கள் வரிசையில் சேவாக்குக்கு முதல் பெஞ்ச்
Friday, December 9, 2011
Wednesday, November 16, 2011
உங்கள் பிளாக்கில் நிலையான மெனு பாரினை உருவாக்க.
இன்று எப்படி நிலையான மெனு பார்களை உங்கள் வலைப்பக்கத்திற்கு உருவாக்கிகொள்வது என்று பாப்போம். அனேகமான வலைப்பக்கங்களில் மெனு பார்கள் வலைப்பக்கத்தின் தலைப்பு பகுதியில் காணப்படும். இவை பக்கத்தினை கீழே நகர்த்திச்செல்லும்போது மறைந்துவிடும். ஆனால் இந்த நிலையான மெனு பார்கள் (Fixed Menu Bar) எப்போதும் வலைப்பக்கத்தின் இடது புறத்திலே அழகாக தோற்றமளிக்கும்.
Tuesday, November 15, 2011
இது போதும் எனக்கு- ஒலிவடிவத்துடன் புதிய முயற்சி
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் ஆழமான சிந்தனைகளுடன் அழகிய இலகு தமிழில் எவர்க்கும் புரியும் படியில் இருக்கும். அதனால்தான் எனக்கு அதிகம் பிடித்துப்போனது கவிப்பேரரசை. அதன் ஒரு விளைவுதான் கவிப்பேரரசின் கவிகளை ஒலிவடிவில் தர தூண்டியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் இங்கே ஆரம்பிக்கிறது. 'இது போதும் எனக்கு' என்ற கவிதையை இன்று ஒலிவடிவத்தில் தருகிறேன்.
கவிதை-வைரமுத்து
கவிதை-வைரமுத்து
குரல்-அஷ்வின்இசை- AR.ரஹ்மான்
Saturday, November 12, 2011
காணவில்லை காணவில்லை விஜயகாந்தை காணவில்லை
கடந்த தேர்தலில் ரிசிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தெரிவாகி கூடுதல் போனஸாக எதிர்கட்சித்தலைவர் பதவி பெற்ற தலைவர் விஜயகாந்தை தேர்தலுக்கு பிற்பாடு காணவில்லை. அவரை பற்றிய விபரங்கள்....................
Tuesday, September 27, 2011
என் கமெராவில் சிக்கியவை சில...
கடந்தவாரம் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊருக்கு சென்றபோது என் கமெரா கண்களில் சிக்கியவை சில.......
(படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன்மீது கிளிக் செய்யுங்கள்)
Friday, September 16, 2011
ஆபாசங்களில்லாம வாழமுடியாதா?
நவீனத்துவம் பெற்ற மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இன்று மாறியிருக்கிறது ஆபாசம் என்ற பதம். உண்மையில் ஆபாசம் என்பது என்னவென்று சொல்வதானால், மனித பாலுணர்வுகளை கிளர்ந்தெழ செய்கின்ற காட்சிகள், வார்த்தைகள், சிற்பங்கள் என்பவற்றையே சொல்லமுடியும். ஆக இப்படிப்பட்ட ஆபாசத்தின் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது ஏதோ ஒருவிதத்தில் மனிதனை மயங்கச்செய்த்து தங்களுடைய சுய லாபங்களை தீர்த்துக்கொள்ளும் பொருட்டே.
Thursday, September 8, 2011
பிறந்தநாளில் சபதம் எடுத்த பேக்கு..
ஒரு மனுஷனுக்கு வருசத்துல ஆயிரம் நல்லநாள் பெருநாள் வரும். ஒவ்வொன்னா சொல்லப்போனா புதுவருசம் (அதுலயும் தமிழ், இங்கிலீசு, சிங்களம் எண்டு), தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் (நம்ம போன்றாக்களுக்கு), தீபாவளி, பெரிய வெள்ளி, கிறிஸ்துமஸ், ரம்ழான், ஆடி பொறப்பு எண்டு ஆயிரம்.. ஆனா இது எல்லாத்துலயும் கொஞ்சம் பெரிய பொறப்புதான்
Wednesday, August 31, 2011
Saturday, August 20, 2011
இந்திய அணித்தலைவர் தோணியுடன் சந்திப்பு- தமிழில் (ஒலிவடிவம்)
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணித்தலைவர் தோனியுடன் தமிழில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் தொகுப்பை பதிவுலகில் முதன்முறையாக இங்கு தருகிறேன்... இவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது...:
இந்த ஒளிவடிவத்திற்கு உதவிய நிருவின் நிஜங்கள் நிருஜனுக்கு நன்றிகள்.. வாங்குற எதிலயும் பங்கு அவருக்கும்தான்................. |
Friday, July 15, 2011
தெய்வதிருமகள் - சுட சுட பார்வை.
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு திரைப்படத்தின் நினைவுகள் மறையமுன் இந்த விமர்சனத்தை தாங்கி வருகிறது எனது வலைப்பூ..
மற்றுமொரு வி.ஐ.பி காட்சி.. ஆனால் வழமை போல் ஏமாற்றமும் அல்ல. அதுவும் பணம் கொடுத்து பார்த்த காட்சி. ஒரு நல்ல காரியத்திற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமானவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒருங்கே சேர்த்து சொன்னால் பணம் கொடுத்து பார்த்த முதல் ஏமாற்றம் அல்லாத வி.ஐ.பி காட்சி என்றுகூட சொல்லலாம். சரி படம் பற்றி பார்ப்போம்.
Sunday, June 19, 2011
மீண்டும் எனக்கொரு சந்தர்ப்பம் தராதா அது???
இன்றைக்கு தந்தையர் தினம்.நண்பர்கள் அனைவருக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.. இன்று உங்கள் தந்தைக்கும் ஒருதடவை நேரிலோ, தொலைபேசியிலோ வாழ்த்திபாருங்கள். புதிய ஒரு உணர்வைத்தரும்...
மீண்டும் எனக்கொரு சந்தர்ப்பம் தராதா அது???
என் வீட்டு கதாநாயகனே நான்
நன்றி சொல்ல தவறிய என் நாயகனே
உங்களிடம் நான் அதிகம் பேசியதில்லை-பதில்
என் இயல்புகளில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
நினைத்துப்பார்க்கிறேன்.. எல்லாவற்றையும்
நினைத்துப்பார்க்கிறேன்.. எல்லாவற்றையும்
Friday, June 17, 2011
கடவுள் இல்லை நீ கல்லிலான கயவன்..
கல்லினில் இரு துளைவைத்து
கண்ணென்று சொல்லி உலகையும்
காப்பான் இவன், தன் கண் கொண்டு என
கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி
கயவனாய் போனாயே - கடவுள் இலை நீ
கல் என்றே சொல்வேன் உனை..
Tuesday, June 14, 2011
வைரமுத்துவுடன் முதல் காதல்- தூசுதட்டியது
இன்றைக்கு என்னமோ பழைய ஞாபகங்கள் வந்ததில் பதிவுலகுக்குள் நுழைந்த நாட்களை மீட்டு பார்த்தேன். அப்படி என்னோட பதிவுகளின் முதல் பக்கத்தை தட்டும் போது (இருக்குறதே 69 பதிவு அதுக்குள்ளே என்னடா முதலாவது பக்கம் முன்நூறாவது பக்கம்) கண்ணில பட்டது இந்த கவிதை. அதை மீண்டும் ஒருதடவை தரலாம் என்ற முடிவோட இங்கே பகிர்கிறேன் நண்பர்களே...(எழுத ஒன்னும் இல்லை அதால இப்படி பழைய படத்த ஓட்டுறன் எண்டு சொல்லன் )
வாரணம் ஆயிரம் கொண்டான்:
வாரணம் ஆயிரம் கொண்டான்:
Monday, June 13, 2011
உச்சக்கட்ட இன்பம் - பாகம்-2(முற்றும்) நான்,சங்கீதா, நண்பன்
நண்பர்களே கதையின் பாகம் ஒன்றை படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்துவரவும். இல்லாட்டி புரியாதுங்க மாட்டார்...பாகம்-1 க்கு
உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா
சங்கீதா வழமையப்போல அதே சிரிப்போட கதவை திறந்தாள். அதுதான் எப்பவும் எனக்கு போர்ன்வீட்டா. நான் செருப்ப கழற்றிட்டு உள்ள போகமுதல் அவள் சட்டென்று போய் என்கதிரையை எடுத்து வைத்து அங்கங்க சிந்தியிருந்த சாப்பாடு துண்டுகளை தட்டிவிடுவாள். அப்படி இருந்தும் ஒன்றிரண்டு துகழ்கள் காட்டிக்கொடுத்திடும். காலைச்சாப்பாட்டடை. அப்படித்தான் இன்றைக்கு ''பாண் சாப்பிட்டிருக்கிறியல் போல'' என்று கொஞ்சம் வாயை சுழித்துக்கொண்டு கேட்க பதிலாய் வந்த அந்த சிட்டுக்குருவிச்சிரிப்பை ரசித்தவாறே கதிரையில் அமர்ந்தேன்.
Sunday, June 12, 2011
உச்சக்கட்ட இன்பம் - பாகம்-1 நான்,சங்கீதா
காலி வீதியில் புயல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்னுடைய சைக்கிள். அப்பாவிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் பிள்ளையின் கால்களைப்போல் என்கால்கள் சைக்கிள் மிதியை மாறிமாறி உதைக்கின்றன. என்னால் பக்கத்தில் சீறிக்கொண்டுவரும் வண்டிகளைக்கூட கவனிக்கமுடியவில்லை. தொண்நூற்றாறில் கிபிர் வருகுதெண்டு அம்மாண்ட சீலைய பிடிச்சுக்கொண்டு பங்கருக்குள் ஓடியதுக்குப்பின் இன்றுதான் இவ்வளவு வேகமாக என்கால்கள் ஓட்டம்கொள்கிறது.
Friday, June 10, 2011
ஜெயிலில் இருந்து ராசா எழுதிய கடிதம்(கவிதை)
2G ராசா என்று எல்லோராலும் அறியப்பட்ட ஆ.ராசா ஜெயிலில்இருந்தவாறு கவிதை ஒன்று எழுதியுள்ளார். இதில் பல மர்மங்கள், தடயங்கள் இருக்கும் என ஐயப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் அக்கவிதையை ஐந்துகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இருந்தும் சி.பி.ஐ. ல் வேலை பார்க்கும் எனது நண்பன் ஒருவனின் உதவியுடன் அக்கவிதை முதன் முதலாக உங்களுக்கு தருகிறேன்..
Thursday, June 9, 2011
இலகுவாக ப்ளாக்கின் FAVICON ஐ மாற்ற | Bloggerன் புதிய வசதி.
இன்று ப்ளாக்கரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியான 'உங்களுடைய பிளாக்கின் favicon ஐ எப்படி மாற்றுவதென்று பார்ப்போம். favicon என்பது ஒரு வலைப்பக்கத்தை திறக்கும் போது மேலுள்ள Address Barல் அந்த வலைப்பக்கம் சம்பந்தமான சிறிய குறிப்படம் ஒன்று இருக்கும். இது அந்த வலைப்பக்கத்தை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளவும் , இலகுவாக ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உதவும். கீழே ஒவ்வொரு தளங்களுக்குமுரிய தனிப்பாங்கான favicon களை காட்டியுள்ளேன்.
Wednesday, June 8, 2011
இந்தியா இலங்கை மக்கள் காமம் ஜதார்த்தம்
கழிவறையில் கண நேரத்தில் உதித்த சிந்தனைகளை அப்டியே மணம் குறையாம அள்ளிட்டுவந்து போட்டிருக்கன். படிச்சுட்டு எப்டி டேஸ்டா இருந்துச்சா எண்டு சொல்லிட்டு போங்கோ:
Tuesday, June 7, 2011
பிளாக்கில் புதிய வகை அனிமேசன் மெனு பார்கள் உருவாக்க.| பதிவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது
புதிய வகையில் விரும்பிய வர்ணத்தில் உங்கள் ப்ளாக்கின் மெனு பாரினை(Menu Bar) அமைத்துக்கொள்ள வேண்டுமா. அதற்காகத்தான் இந்த பதிவு. இதன் படி பின்பற்றி உங்கள் மெனு பாரினை மாற்றிக்கொண்டால் அல்லது இதுவரை மெனு பார் பிளாக்கில் கொண்டிருக்காதவர்கள் உங்கள் பிளாக்கில் இவ் அனிமேசன் வகை மெனுபாரை வரச்செய்து உங்கள் ப்ளாக்கினை மேலும் மெருகூட்டுவதுடன் வாசகர்களையும் கவரலாம்.
Monday, June 6, 2011
பெண் கண்டார் பெண்ணே கண்டார் - அடிச்சுடாதேங்கோ..
இன்று தற்செயலாக எனக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவரை காண நேர்ந்தது. உடனே அவர் முன்சென்று என்னை அறிமுகப்படுத்தப்போக ''அட பெண் கண்டார் , நீயும் இங்கேயா இருக்கிறாய்'' என்று முந்திக்கொண்டார். ஆஹா இவர் அத இன்னும் மறக்கேலையா.. எனக்கே மறந்து போச்சு. அது வேற ஒன்னும் இல்லைங்க எட்டாம் வகுப்புல நாங்கள் படிக்குற காலத்துல எங்கட தமிழ் பாடபுத்தகத்துல ஒரு பாடல் இருந்துச்சு. கலைஞர் ஐயா எழுதின செம்மொழிப்பாடல்
Sunday, June 5, 2011
விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)
எனக்கு உண்மையில் அந்த நாட்கள் மறந்துதான் போயிருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு வருடங்களில் அந்த ஞாபகம் வந்ததே இல்லை. நிம்மதியாய்த்தான் இருந்தேன். ஆனால் இன்று மீண்டும் அழைப்பு ஒரு நண்பனிடமிருந்து. இரவு ஒரு பார்டி இருக்குது வாடா என்றான் தொலைபேசி வாயிலாக. பார்டி என்றால் பலதும் பத்தும் இருக்கும் இருந்தாலும் நல்ல சாப்பாடு இருக்குமே என்பதால் அவனுடன் சென்றேன். அங்குதான் மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்தது. என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை அவள்தானோ என்று. பெயர்கூட மறந்திருந்தது. ஒருவேளை இது அவள் சகோதரியாய் கூட இருந்திருக்கலாம். இருந்தும் அந்த கட்டுடல் , அதே கலர் சொன்னது இது அவளேதான்...
Thursday, June 2, 2011
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?
ரொம்ப நாளாவே எனக்கொரு கடமை பாக்கியிருந்துச்சு.. அத எப்டியாவது நிறைவேத்திடனும் நிறைவேத்திடனும்னு பாத்திட்டிருந்தன் இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சுது.. சிலபல நாட்களுக்கு முதல்ல (சுமார் ஆறு மாசம் தாங்க) என்னைய ஜனா அண்ணா கேட்டிருந்தார் 'டேய் அஷ்வின் தம்பி நீ 'மனம் போல் வாழ்வு ' என்ற தலைப்புல ஒரு பதிவு போடுடா எண்டு. சரி நானும் போடுவம் போடுவம் எண்டு வந்தா மனசும் உடம்பும் கொஞ்சம் இடம் கொடுக்கல. சரி இண்டைக்காவது போட்டிடுவம் எண்டு வந்துட்டன்.
Saturday, May 21, 2011
அடுத்த தலைவர் நானே.. பிரசவ விடுமுறையும் உண்டு.
அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே.. இந்த இடத்துலே நான் யார் என்று சொல்லிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடம் இல்லை ஏனெனில் மக்களோடு மக்களாக, பதிவர்களோடோ பதிவர்களாக நானும் உங்கள் இன்ப துன்ப கும்மிகளில் பங்கெடுத்தவன்.. இருந்தும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
Friday, March 11, 2011
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
Wednesday, March 9, 2011
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.
ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க. என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா ஆடை உடுத்த ஆரம்பித்தாளோ அன்றே அவளுக்கு சுதந்திரம் இருநூருமடங்க கிடைச்சாச்சு. அத நல்ல வழில பயன்படுத்துறதும் தாராள மனப்பான்மையோட பயன்படுத்துறதும் அவங்க கையுலதான் இருக்கு. இந்த நூற்றாண்டுல பேச வேண்டிய மாட்டார் ஆன விடுதலை. ஸோ யாராச்சும் ஆண் விடுதலையபத்தியும் எழுதுங்கவன்..
இந்த ஒலகத்துல ஆண்களுக்கு சுதந்திரமே இல்லைங்க. பொறந்ததில இருந்து
Monday, February 28, 2011
சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?
மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..
யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..
Monday, February 14, 2011
காதலித்து வா - காதலர் தின கவிதை
வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..
காதலித்து வா ....
காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
பறந்துவிட தினம் தினம் துடிக்குது
ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
தகுதிகள் இருந்து விட்டால்
Monday, January 17, 2011
காவலன் வீடியோ பாடல் முதன் முதலா..
வாறதுக்கு கொஞ்சம் முரண்டுபிடிச்சாலும் வந்ததில இருந்து செம பட்டையபோட தொடங்கியிருக்கு காவலன்.. விஜய் தன்னோட ஆஸ்தான ரசிகர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே செம தீனி கொடுத்திருக்கிறார்.. விஜய் படம் பாத்திட்டு பதுங்கி திரிஞ்சவங்க எல்லாம் இப்போ நெஞ்ச நிமித்திட்டு விஜய் ரசிகன் என்று சொல்லுறம்.. இதுக்கெல்லாம் ஒரேகாரணம் யாரையும் காப்பி அடிக்காத தனித்துவமான விஜயின் நடிப்பே..
இப்போ நான் காவலன் திரைவிமர்சனம் சொல்லபோறன் எண்டு நெனச்சுடாதீங்கோ.. விமர்சனம் வரும் வரைக்கும் கூலா டச்சுல இருக்குறதுக்கு வெற்றிப்படம் காவலன்-Bodyguard ல இருந்து ''யாரது யாரது'' பாடலை முதன்முதலா ஒளி படமா தரலாம் எண்டு வந்தன்.
இந்தாங்கோ...
எஸ்கேப்.............
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊட்டுக்கு வந்துட்டியல் போகேக்க சொல்லிடு போங்க....
இப்போ நான் காவலன் திரைவிமர்சனம் சொல்லபோறன் எண்டு நெனச்சுடாதீங்கோ.. விமர்சனம் வரும் வரைக்கும் கூலா டச்சுல இருக்குறதுக்கு வெற்றிப்படம் காவலன்-Bodyguard ல இருந்து ''யாரது யாரது'' பாடலை முதன்முதலா ஒளி படமா தரலாம் எண்டு வந்தன்.
இந்தாங்கோ...
எஸ்கேப்.............
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊட்டுக்கு வந்துட்டியல் போகேக்க சொல்லிடு போங்க....
Friday, January 14, 2011
காவலன் - விமர்சனம்.
சுமார் 35 கோடி இந்திய ரூபாய் பட்ஜெட்டில் கோடி பிரச்சனைகள் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு பட்டைய கிளப்ப போற படம்தான் நம்ம இளைய தளபதியின் காவலன். இதுல அண்ணாத்தயோட சிலான் புகழ் அம்மணி அசின், ராஜ்கிரண் சார், வடிவேலு அண்ணே எல்லாரும் நடிச்சிருக்கினம். படம் இப்போ
Subscribe to:
Posts (Atom)